சென்னை: கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் (Google Password Manager) என்பது உங்கள் அனைத்து டிஜிட்டல் கணக்குகளுக்கும் தேவையான அனைத்து பாஸ்வேர்ட்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாகும். இந்த அம்சம் கூகுள் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைக்கும். இப்போது இந்த கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் பகிரலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த அம்சத்தை பற்றி கூகுள் கூறி இருந்தது. இப்போது பயனர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
குடும்பத்துடன் கூகுள் பாஸ்வேர்டைப் பகிரும் அம்சம்: இந்த வாரம் வெளிவரும் 24.20 வெர்ஷன்க்கு கூகுள் பிளே (Google Play) சேவைகளைப் புதுப்பிக்கும்போது இந்தப் புதிய அம்சம் கிடைக்கும். கூகுளின் பாஸ்வேர்ட் மேனேஜர் மொபைல், டெஸ்க்டாப் ஆகியவற்றில் கிடைக்கும். குரோம் பிரவுசர் மூலம் இது செயல்படுகிறது. ஆனால் நீங்கள் குடும்பக் குரூப்பை அமைத்திருந்தால் மட்டுமே பாஸ்வேர்ட்களை பகிரும் அம்சம் கிடைக்கும். மேலும் பாஸ்வேர்ட்களைப் பகிரும்போது, அந்த உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் கணக்குகளுக்கான தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்த முடியும்.

கூகுள் மேனேஜர் பாஸ்வேர்டை எவ்வாறு குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது?: குரோம் பிரவுசரில் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் பிரிவுக்குச் சென்று ஏற்கனவே சேமிக்கப்பட்ட கணக்குகளில் ஒன்றைக் கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு கூகுள் உங்களுக்கு "Share copy of your password" என்ற பாப் அப் மெசேஜ் பாக்ஸ்-ஐ காண்பிக்கும். அதில் உங்களுடைய குடும்ப உறுப்பினர் விவரங்களை நிரப்பலாம். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட பாஸ்வேர்டை, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் எந்த ஒரு ஆப் அல்லது சேவைக்காகவும் உங்கள் குடும்ப உறுப்பினரும் பயன்படுத்தலாம்.
இந்த கூகுள் மேனேஜர் பாஸ்வேர்டை குடும்பத்துடன் பகிர்வது முழு பாதுகாப்பையும் வழங்கும் என்று கூகுள் உறுதியளித்துள்ளது. நீங்கள் ஒரு குடும்ப குரூப்பை வைத்து இருந்தால் அதில் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரே அக்கவுண்ட் விபரங்களை பலர் பயன்படுத்துவது தற்போது அதிக குடும்பங்களில் இருக்கும் ஒரு செயல்முறையாகும். இதனை இது போன்ற அம்சம் இன்னும் எளிமையானதாக மாற்றும் என்று கருதப்படுகிறது. மேலும், ஒவ்வொரு முறையும் உங்கள் குடும்ப உறுப்பினரின் பாஸ்வேர்டை வாட்ஸ்அப்பில் அல்லது SMS மூலமாகவோ அனுப்பி அதன் பிறகு இன்னொருவருடைய அக்கவுண்ட்டைப் பயன்படுத்துவதற்கு, இதுபோன்ற கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரைப் பயன்படுத்தி, நீங்கள் எளிதாக பார்த்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications