மும்பை: இந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் தொழிலதிபர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியவை இந்தியாவில் பெரிதளவில் கவனிக்கப்படும் விஷயங்களாக இருக்கின்றன. அண்மையில் கூட முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான பிரபலங்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர்.

குஜராத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் இந்தியாவே உன்னிப்பாக கவனித்ததை நாம் அறிவோம் ஆனால் சில சமயங்களில் இப்படி பிரபலமாக இருப்பவர்களின் உறவினர்கள் பெரிதளவில் தங்களை வெளிகாட்டி கொள்ள மாட்டார்கள் அப்படி மிகப்பெரிய பணக்காரரின் சகோதரர் ஆனால் வெளியுலகில் பெரிய அளவில் தெரியாத ஒரு தொழிலதிபர் குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்த்திருக்கிறோம்.
ஒரு குடும்பத்தில் ஒரு ஒருவர் சிறந்த தொழிலதிபராகி நிறைய சம்பாதித்து கோடீஸ்வரராக இருக்கிறார் ஊர் உலகமெல்லாம் அவரைப் பற்றி தெரிகிறது என்றபோது பொதுவாகவே அவர் உடன்பிறந்தவர் பற்றிய கவனமும் நமக்கு ஏற்படும்.
இதற்கு முக்கியம் அவரும் இவரை போலவே தொழிலில் முன்னேறி இருக்கிறாரா என்பதை அறிவதற்கான ஆர்வம் நம்மிடையே இருக்கும். அப்படி ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் சகோதரராக இருந்தும் வெளியுலகில் தன்னை பெருமளவில் காட்டிக் கொள்ளாத ஒரு நபர் தான் கோபி கிஷன் தமானி. இந்தியாவின் ரீடைல் கிங் எனப்படும் ராதாகிஷன் தமானியின் சகோதரர் கோபி கிஷன் தமனி.
இந்தியாவில் உள்ள பணக்கார சகோதரர்களில் இவர்களும் ஒருவர். கோபி கிஷன் மற்றும் ராதாகிஷன் தமனி இருவரும் அவன்யூ சூப்பர் மார்ட் என்ற அதாவது டி மார்ட் என்ற இந்தியாவின் பிரபலமான ரீடைல் ஸ்டோர்களை நடத்தி வெற்றி கண்டுள்ளனர். இதில் ராதாகிஷனின் பங்கு மிக அதிகம் எனவே தான் அவருக்கு ரீடைல் கிங் என்ற பெயர் கிடைத்தது.
இந்த ராதாகிஷன் தமனியின் இளைய சகோதரர் தான் கோபிகிஷன் தமனி.1 இவர் தெற்கு மும்பையில் ஒரு வீட்டுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 100 மில்லியன் டாலர்களை செலுத்தியிருக்கிறார்.
மும்பையின் பிரதான இடத்தில் பில்லினியர் விகாஸ் ஓபராய் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 28 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக இவர் 155 மில்லியன் டாலர்களை செலுத்தி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ரீடைல் துறையை தாண்டி கோபி கிஷன் தமனி சுகாதாரத்துறை மற்றும் நிதித்துறை சார்ந்த முதலீடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். போர்ஃப்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய் ஆகும்.
தற்போது இவருக்கு 65 வயதாகிறது. 1992 ஆம் ஆண்டு ஸ்டாக் ப்ரோக்கர் ஆக தன்னுடைய வேலையை இவர் தொடங்கியுள்ளார். ஒரு சமயத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக வரி செலுத்திய நபர் என மத்திய அரசு இவருக்கு விருது கூட வழங்கி இருக்கிறது.
Story written by : Devika


Click it and Unblock the Notifications