வரவர இந்த ஏஐ தொல்லை தாங்க முடியவில்லை என்பது போல் மக்களின் கேள்விக்கு ஏஐ கொடுக்கும் பதில்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கி வருகிறது. முன்பெல்லாம் யாராவது ஒருவர் செய்யும் பதிவில் இருந்து தான் விவாதம் வெடிக்கும், ஆனால் இப்போதெல்லாம் ஏஐ கொடுக்கும் பதில் தான் பெரும் விவாத பொருளாக மாறுகிறது.
எலான் மஸ்க்-கிற்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் இருக்கும் கோர்க் தற்போது இந்தியாவில் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது, மக்கள் அதிகமாகப் படியாக GROK பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இப்படி கோர்க்-யிடம் கேட்கப்பட்ட கேள்வி தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

பவிகா கபூர் என்ற எக்ஸ் பயனர், செயற்கை நுண்ணறிவு மாடலான Grok-யிடம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டாப் 10% பணக்கார நபர்களை நீக்கினால், தனிநபர் GDP ஆப்பிரிக்க நாட்டின் GDPக்கு சமமாக இருக்குமா என்று ஒரு கருத்தியல் கேள்வியைக் கேட்டார்.
இதற்கு பதில் அளித்துள்ள Grok, டாப் 10% நீக்கினால், இந்தியாவின் தனிநபர் GDP சுமார் 1,128 டாலராக குறையும் என்று Grok கூறியது. இந்த எண்ணிக்கை செனகல் (1,090 டாலர்) மற்றும் கேமரூன் (1,150 டாலர்) போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் தனிநபர் GDP-க்கு அருகில் உள்ளது.
Grok மேலும், இந்த குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இந்தியாவில் நிலவும் கணிசமான வருமான சமத்துவமின்மையைக் காட்டுகிறது, இந்தியாவில் டாப் 10% வருமானம் பெறுபவர்கள் நாட்டின் மொத்த வருமான பங்கீட்டில் சுமார் 57% கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இதன் மூலம் மொத்த தனிநபர் GDP புள்ளிவிவரமான 2,613 டாலர் அளவீட்டை இது பாதிக்கிறது. கணிசமாக மாற்றியமைக்கின்றனர்.

இந்தியாவுக்கு மட்டும் தான் இப்படியா இல்லை அமெரிக்காவுக்கும் இதே நிலைமை தானா என்பதை தெரிந்துகொள்ள இஷான் டன்னா என்ற மற்றொரு எக்ஸ் பயனர், அமெரிக்காவில் உள்ள டாப் 10% பணக்கார நபர்களைக் கணக்கீட்டில் இருந்து நீக்கினால், அமெரிக்காவின் தனிநபர் GDP எந்த நாடுகளுடன் ஒத்துப்போகும் என்று Grok-யிடம் கேட்டார்.
Grok இதற்கு, அமெரிக்க GDP யிலிருந்து டாப் 10% நீக்கினால், சரிசெய்யப்பட்ட தனிநபர் GDP சுமார் 53,327 டாலராக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை பின்லாந்து (53,100 டாலர்) மற்றும் கனடா (52,600 டாலர்) போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் அமெரிக்கா ஒத்துப்போகிறது.
அமெரிக்காவில் டாப் 10% பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் சுமார் 30.2% பங்கீட்டை வைத்துள்ளனர், இது இந்தியாவில் இருப்பதை விட குறைவான வருமான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் Grok தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவுகளிலும், மதிப்பீடுகளிலும் ஒப்பிடும்போது சிறிய வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று Grok எச்சரித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவில் அதிகம் வருமானம் பெறுபவர்களை விலக்கினாலும், மற்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில் தான் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இத்தகைய செயற்கை நுண்ணறிவு மாடலின் தரவுகள் எப்போதும் சரியாக இருக்கும் என நம்பக்கூடாது. பொருளாதார தரவுகளின் சமீபத்திய தரவுக்களுக்கும் இதற்கு கட்டாயம் மாறுப்பாடு இருக்கும்.
இதேபோல் வருமான சமத்துவமின்மை என்பது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications