இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்கள் ஊழியர்களில் 12000 பேரை இந்த ஆண்டு வேலையில் இருந்து நீக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு ஐடி துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டிசிஎஸ் பணிநீக்கம்: டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கை மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஐடி ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் பணி நீக்கு அறிவிப்பை தொடர்ந்து டிசிஎஸ் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர். டிசிஎஸ் நிறுவனம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை வேலையில் இருந்து ராஜினாமா செய்ய வைக்கிறது, ஃபிரஷர்களை பணி நீக்கம் செய்கிறது , சம்பளத்தை நிலுவையில் வைத்திருக்கிறது என சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக புகார்களை காண முடிகிறது .

சம்பள உயர்வு: இதற்கிடையே டிசிஎஸ் நிர்வாகம் தங்களுடைய ஊழியர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி அன்று ஊதிய உயர்வை அறிவித்தது . 4.5% முதல் 7% வரை என ஜூனியர் முதல் மிடில் லெவல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் ஊதிய உயர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டிருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மாத கால தாமதத்திற்கு பிறகு ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு என்பது கிடைத்திருக்கிறது .
5 மாதம் தாமதம்: வழக்கமாக டிசிஎஸ் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊதியத்தை உயர்த்தி வழங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு மேக்ரோ பொருளாதார சூழல்களை காரணம் காட்டி ஊதிய உயர்வை தள்ளி வைத்திருந்தது. தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய 80 சதவீத ஊழியர்கள் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து சம்பள உயர்வை பெறுவார்கள் எனக் கூறியிருந்தது. அந்த வகையில் பல்வேறு ஊழியர்களும் செப்டம்பர் 1ஆம் தேதி சம்பள உயர்வுக்கான கடிதத்தை பெற்று விட்டார்கள்.

1% தான் சம்பள உயர்வு: சமூக வலைத்தளங்களில் டிசிஎஸ் கன்ஃபெசன்ஸ் என்ற பக்கங்களில் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு வெறும் 1 சதவீதம் தான் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாக பகிர்ந்திருக்கின்றனர். ஒரு நபர் நான் சி பேண்ட் பிரிவில் சம்பளம் பெறுகிறேன் என்னுடைய தற்போதைய ஆண்டு ஊதியம் 20 லட்சம் ரூபாய் அதனை தற்போது 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறார்கள், 1 சதவீதம் தான் சம்பள உயர்வு வழங்கி இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.
எல்லாருக்கும் சம்பள உயர்வு இல்லை: மேலும் பலரும் அலுவலகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஊதிய உயர்வுக்கான கடிதத்தை வழங்கியிருக்கிறார்கள் அனைவருக்கும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றனர். டிசிஎஸ் நிறுவனம் ஏ பேண்ட் பிரிவில் சம்பளம் பெறுபவர்களுக்கு 7%, பி பேண்ட் பிரிவில் சம்பளம் பெறுபவர்களுக்கு 4.5% , சி பேண்ட் பிரிவில் இருப்பவர்களுக்கு 1% என சம்பள உயர்வு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications