பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு தற்போது டிஜிட்டல் பேமெண்ட் தளங்களுக்கு மக்கள் மாறி இருந்தாலும், பலர் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து செலவு செய்து வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் ஏடிஎம்மில் இருந்து வரும் பணம் கிழிந்து அல்லது அழுக்கோடு கைக்கும் கிடைத்தால் என்ன செய்வது? என்று யோசித்திருக்கிறீர்களா?. கவலைப்படத் தேவையில்லை.. இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை மாற்றுவதற்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அவற்றை பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் அல்லது ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் 5 கிழிந்த நோட்டுகள் இருந்தால் எந்தவித விண்ணப்ப படிவத்தையும் நிரப்பாமல் டைரக்டாக கவுண்டரில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களிடம் 5 நோட்டுகளுக்கு மேல் அல்லது ரூ.5000 ரூபாய்க்கு அதிகமான கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதற்கு விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து மாற்ற வேண்டும். ஏடிஎம் மட்டுமின்றி தவறுதலாக 5,000 ரூபாய்க்கு மேல் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால் வங்கிகள் அதற்கு சேவை கட்டணங்களை விதிக்கலாம்.
அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?: ரூ.5000 மதிப்பிலான அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அவற்றை வங்கிகள் எந்தவித கட்டணங்களும் இல்லாமல் மாற்றித் தரும். ஆனால் ரூ.5000 ரூபாய்க்கு மேல்.. அதாவது சுமார் 20 நோட்டுகளுக்கு அதிகமாக அழுக்கடைந்த நோட்டுகள் இருந்தால் அவற்றை ப்ராசஸ் செய்து உங்களிடம் பணத்தை திரும்பத் தர நேரம் எடுக்கும். அதேபோல 50,000 ரூபாய்க்கு அதிகமாக நோட்டுகளை மாற்ற விரும்பினால்.. வங்கி கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி அதற்கு சேவை கட்டணங்களை விதிக்கும்.
டிஎல்ஆர் (டிரிபிள் லாக் ரிசெப்டக்கிள்) முறையில் பணம் மாற்றுவது எப்படி?: பொது மக்களின் வசதிக்காக TLR என்பதைப் பயன்படுத்தி கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை RBI அறிமுகப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியில் உள்ள கவுண்டரிலிருந்து அதற்கு TLR கவரைப் பெற வேண்டும். அதில் உங்களுடைய பெயர், முகவரி, நீங்கள் டெபாசிட் செய்யும் நோட்டுகளின் மதிப்பு போன்ற அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர், TLR கவரை மூடி, டிரிபிள் லாக் ரெசிப்டக்கிள் என்ற பெட்டியில் போடவும். பதிலுக்கு உங்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும்.
இந்த பெட்டிகள் ஒவ்வொரு ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் உள்ள விசாரணை கவுண்டரில் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் டெபாசிட் செய்த சேதமடைந்த நோட்டுகள் உங்களுக்கு பேங்க் ட்ராப்ட் அல்லது பெ-ஆர்டர் மூலமாக வழங்கப்படும். நீங்கள் சேதமடைந்த நோட்டுகளை எந்த ஆர்பிஐ அலுவலகத்திற்கு வேண்டுமானாலும் தபால் மூலமாக அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications