சம்பான் திட்டத்தின் மூலம் அரசுக்கு மாதம் ரூ.11 கோடி மிச்சம்.. எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வூதிய மேலாண்மை மற்றும் அதிகார அமைப்பான சம்பான் (SAMPANN) திட்டத்தின் கீழ், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

 

ஓய்வூதியம் செலுத்துவதற்காக வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களுக்கு கமிஷன் செலுத்தப்படுவதால், இந்திய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான மாதாந்திர சேமிப்பினை சம்பான் திட்டம் உறுதி செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஜூன் 2021 நிலவரப்படி, அரசுக்கு மாதம் மாதம் 11.5 கோடி ரூபாய் செலவு குறைந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதம்தோறும் 11 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகியுள்ளது.

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.53 ரூபாயாகச் சரிவு..!

குறைகள் தீர்க்கப்பட்டது

குறைகள் தீர்க்கப்பட்டது

இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் 2021 நிலவரப்படி, 9,630 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 1,01,341 ஓய்வூதியதார்களுக்கு 15,825.44 கோடி ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த திட்டம் குறைகளை விரைவாக களைவதற்கும், அதனை தீர்ப்பதற்கும், இந்த திட்டம் மிக உதவிகரமாக உள்ளதாகவும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு உதவி

பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு உதவி

இந்த திட்டத்தின் மூலம் 76,000 பி.எஸ்.என்.எல் தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டம் 2019, குறைகளை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சம்பான் திட்டம் பென்ஷன் வழங்குவதில் உள்ள கால தாமதத்தினை தவிர்த்திடும், ஒரு முக்கிய திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எப்போது அறிமுகம்
 

எப்போது அறிமுகம்

கடந்த 29, டிசம்பர் 2018ல் பிரதமர் நரேந்திர மோடி சம்பான் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இது தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகுந்த பயனளிப்பதுடன், ஓய்வூதியத்தினை சரியான நேரத்தில் பெறவும் உதவியாக உள்ளது.

அரசு ஏராளமான ஓய்வூதிய திட்டங்களை வழங்கி வரும் நிலையில், சம்பான் திட்டம் தொலைத் தொடர்பு துறையில் உள்ள ஓய்வூதியதாரர்கள் நிம்மதியாக ஓய்வுகாலத்தில் வாழ கைகொடுக்கும் எனலாம்.

பிரச்சனை இருக்காது

பிரச்சனை இருக்காது

மேலும் இந்த திட்டம் மூலம் குறைகளும் விரைவில் தீர்க்கப்பட்டு, தீர்வு காணப்படுவதால், இது விரைவில் ஓய்வூதியதாரர்களுக்கு பலன் கொடுக்கும். இதனால் ஓய்வூதியதாரர்கள் பிரச்சனைகள் இல்லாமல் பென்ஷனை பெற முடியும். அப்படி பிரச்சனைகள் இருந்தாலும் எளிதில் இந்த திட்டம் மூலம் களைய முடியும். மொத்தத்தில் வயதான காலகட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் பிரச்சனை இல்லாமல் எளிதில் பெற தீர்வாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sampan சம்பான்
English summary

Government able to save monthly Rs.11.5 crore through the SAMPANN project

Government able to save Rs.11.5 crore through the SAMPANN project/ சம்பான் திட்டத்தின் மூலம் அரசுக்கு ரூ.11 கோடி மிச்சம்.. எப்படி தெரியுமா?
Story first published: Thursday, December 9, 2021, 20:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X