இந்தியாவில் டாக்ஸி சேவைகளில் தனியார் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரு நகரங்களில் நாம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளை தான் நம்பி இருக்கிறோம்.
தனியார் நிறுவன செயலிகள் பீக் அவர்களிலும் , டிமாண்டிற்கு ஏற்ற வகையிலும் கட்டணத்தை உயர்த்துகின்றன. இதனால் பீக் அவர்களில் டாக்ஸியில் செல்ல வேண்டும் என்றால் நாம் மற்ற சமயங்களை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இது போக சில சமயங்களில் ஓட்டுநர்களும் அதில் காட்டும் தொகையை விட கூடுதலாக நம்மிடம் வசூல் செய்கிறார்கள். கேட்டால் நீங்கள் கொடுக்கும் தொகையில் நிறுவனத்திற்கே கமிஷனாக சென்றுவிடுகிறது என கூறுவார்கள்.

இந்த டாக்ஸி சேவையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஒரே மாதிரியான கட்டண விதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தான் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஒரு நிவாரணம் கிடைக்க இருக்கிறது. மத்திய அரசு சார்பாக நாடு முழுவதும் பாரத் டாக்ஸி என்ற சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதற்கான அதிகாரபூர்வ செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும். தற்போது இந்த செயலி சோதனை முயற்சியில் இருக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் மாதத்தில் டெல்லியில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த செயலி பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. முதல் கட்டமாக சுமார் 500 ஓட்டுநர்களும் பின்னர் நாடு முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் 5 ஆயிரம் டாக்ஸி ஓட்டுநர்களும் இந்த செயலியில் இணைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு இதனை நாட்டின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை என அழைக்கிறது. மத்திய அரசின் மின் ஆளுகை பிரிவு மற்றும் கூட்டுறவுத்துறையால் இந்த பாரத் டாக்ஸி சேவை செயல்படுத்தப்படுகிறது. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தனியார் செயலிகளுக்கு போட்டியாக இது இருக்கும் என்றும் முறையான டாக்ஸி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன செயலிகளை போல ஓட்டுநர்கள் இதில் ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் செலுத்த வேண்டிய தேவையில்லை. அவர்கள் மாதந்தோறும் ஒரு சந்தா தொகையை செலுத்திவிட்டு பாரத் டாக்ஸி செயலியில் இணைந்து கொள்ளலாம். செயலியில் வரக்கூடிய ரைடுகளில் வாடிக்கையாளர் செலுத்தக்கூடிய முழு தொகையும் ஓட்டுநர்களுக்கே செல்லும். எனவே ஓட்டுநர்களுக்கு இது லாபம்.
வாடிக்கையாளர்களை பொறுத்தவரை கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும் பீக் அவர்களில் கூடுதல் கட்டணங்கள் இருக்காது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். முதலில் டெல்லியில் தொடங்கி பின்னர் மும்பை ,புனே, லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூரு, சென்னை என பல நகரங்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
2026 ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் பாரத் டாக்ஸி சேவை பயன்பாட்டில் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு லட்சம் ஓட்டுனர்களை இதில் இணைக்கவும் முடிவு செய்து இருக்கின்றனர். இது ஒரு கூட்டுறவு அமைப்பாக செயல்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பாரத் டாக்ஸி சேவையில் ரெண்டல் , லோக்கல் ட்ரான்ஸ்ஃபர், அவுட் ஸ்டேஷன் என மூன்று சேவைகளை பெறலாம்.
ரெண்டல் என்பது ஒரு காரை எட்டு மணி நேரம் வரை நாம் வாடகைக்கு எடுப்பதற்கு நமக்கு அனுமதிக்கிறது . ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணம் செய்வதற்கான சேவையை வழங்குகிறது அவுட் ஸ்டேஷன், ஒரு நகரத்திற்குள்ளேயான பயணத்திற்கான ஆப்ஷன் லோக்கல் ட்ரான்ஸ்ஃபர் ஆகும் .
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications