டெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH), புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை வேகமாகவும் காகிதமற்றதாகவும் மாற்ற, புதிய இயக்க நடைமுறையை (SoP) உருவாக்கியுள்ளது. இது பேப்பர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட திட்டமாகும். இதன் காரணமாக ஒப்புதல் மற்றும் அனுமதி போன்றவை எளிதாக ஆன்லைன் இல் பெற முடியும்.
இந்த புதிய எஸ்ஓபி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), மாநில அரசுகள், எல்லைச் சாலைகள் அமைப்பு, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் MoRTH திட்ட அமலாக்கப் பிரிவுகள் (PIUs) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து புதிய சாலைத் திட்டங்களுக்கும் புதிய SOP பயன்படுத்தப்படும்.

புதிய எஸ்ஓபி விதிகளின்படி, ஒவ்வொரு நெடுஞ்சாலைத் திட்டத்திற்கும் இ - டாக்குமெண்ட்ஸ் உருவாக்கப்படும். அதில் திட்டத்தின் பெயர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செலவு போன்ற தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த இ - டாக்குமெண்ட்கள் திட்டம் தொடங்கவுள்ள பகுதிகள் மற்றும் அமைச்சகம் ஆகிய இரண்டிலும் வைக்கப்படும்.
புதிய திட்டத்திற்கான மற்ற அனைத்து விவரங்களும் அனுமதிகளும் ஆன்லைனில் பெறப்பட்டவுடன், அனுமதி மற்றும் ஒப்புதலை நாட்களுக்குப் பதிலாக நிமிடங்களில் முடிக்க முடியும் என்பதை உறுதி செய்ய இத்தகைய டிஜிட்டல் SOP யை நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. முழுமையாக டிஜிட்டல் என்பதால் இதற்கு தேவைப்படும் நேரம் குறைவதோடு புதிய திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எளிமையாகவும் இருக்கும். மேலும், பேப்பர் லேஸ் என்பதால், முக்கிய டாக்குமெண்ட்களை ஈஸியாக பார்க்க முடியும்.
புதிய திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு விரைவாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அது சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளரை இதற்காக ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஒப்புதல் மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்படும். புதிய திட்டப் பகுதிகளில், இ- டாக்குமெண்ட்கள் இருக்கும். இந்த இ- டாக்குமெண்ட்களில் ஒப்புதல் கடிதம் மற்றும் தொழில்நுட்ப குறிப்புகள் போன்றவற்றின் கையொப்பமிடப்பட்ட நகல் உட்பட பெறப்பட்ட, செயலாக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளின் பதிவுகளும் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவினர் இந்த டாக்குமெண்ட்களை முழுமையாக கொண்டிருக்கும், புதிய திட்டங்களில் தேவைப்படும் நேரங்களில் இந்த ஒப்புதல் விவரங்களை வழங்கும்.
இந்த மாற்றங்கள் நெடுஞ்சாலை ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் சிறந்த செயலாக்க முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் நெடுஞ்சாலை மேம்பாடு மிகவும் பின் தங்கி உள்ளது, ஆனால் 2024 நிதியாண்டில் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு 12,300 கிலோமீட்டர்களை எட்டியுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் முறையானது நெடுஞ்சாலைகளை வழங்குதல் மற்றும் நிர்மாணிக்கும் செயல்முறையை இன்னும் விரைவுபடுத்த உதவும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறை சிக்கலான நெடுஞ்சாலைத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இருக்கலாம். 50,000 கிலோமீட்டர்களுக்கு மேல் செயல்படுத்துவதை உள்ளடக்கிய அரசாங்கத்தின் விஷன் 2047 திட்டத்தைச் சந்திக்க இது இன்றியமையாத ஒன்றாகும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications