இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருக்கிறது. தசரா, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகள் வர இருக்கின்றன. பண்டிகையை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உற்சாகமாக கொண்டாட கூடிய வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியீடு இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்களின் ஊதியத்தில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீத தொகை என்பது அகவிலைப்படியாக கிடைக்கிறது.

உதாரணமாக ஒரு நபரின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் என வைத்துக் கொண்டால் 18,000 ரூபாயுடன் சேர்த்து அவருடைய சம்பளத்தில் 55 சதவீதம் அதாவது 9,900 ரூபாய் கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூன் வரையிலும் பின்னர் ஜூலையில் இருந்து டிசம்பர் வரையிலும் என கணக்கீடு செய்யப்பட்டு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது . இந்த ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஜூலை மாதத்தில் இருந்து கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இந்த முறை அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமாம். அதாவது தற்போது 55 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில் அது 58% ஆக உயர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்திலேயே அகவிலைப்படி உயர்ந்து விடும் என்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அரியர் பணமும் அக்டோபர் மாத சம்பளத்திலேயே வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கக்கூடிய ஒரு மத்திய அரசு ஊழியர் இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு அத்துடன் சேர்த்து கூடுதலாக 10,440 ரூபாயை அகவிலை படியாக பெறுவார் . ஏற்கனவே சம்பள கமிஷன் தாமதமாவதால் வருத்தத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதலே 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை சம்பள கமிஷன் பணிகளே தொடங்கவில்லை, எனவே இந்த பணிகள் முடிந்து சம்பள உயர்வு கிடைக்க 2027ஆம் ஆண்டு வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications