எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அரசு மானியம் தருவது உங்களுக்கு தெரியுமா? டெட்லைன் நெருங்குது!

அனைவரையும் மின்சார இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ஊக்குவிக்கும் விதமாக கனரக தொழில்துறை அமைச்சகம் மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டம் (Electric Mobility Promotion Scheme 2024 - EMPS 2024 என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருந்த இந்தத் திட்டம், தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு இந்தத் திட்டத்திற்கான நிதியை ரூ. 500 கோடியிலிருந்து ரூ. 778 கோடியாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவித்தது.

2024-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த EMPS 2024 திட்டம், இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அரசு மானியம் தருவது உங்களுக்கு தெரியுமா? டெட்லைன் நெருங்குது!

ஜூலை 31-ஆம் தேதி அன்று இந்தத் திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 30 வரை, இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்று சக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள், 2 சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

முக்கியமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், மின்சார ரிக்‌ஷாக்கள் ஆகியவற்றின் விற்பனையில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டம் அரசின் பசுமை முயற்சிகளை ஆதரிப்பதோடு, நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

EMPS 2024 திட்டத்தின் கீழ் தற்போது, 5,60,789 மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5,00,080 மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் 60,709 மின்சார மூன்று சக்கர வாகனங்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் மானியமாக 2 சக்கர EV வாகனங்களுக்கு 10,000 ரூபாயும், 3 சக்கர EV வாகனங்களுக்கு 25,000 ரூபாயும், 3 சக்கர கனரக EV வாகனங்களுக்கு 50,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

அரசின் ஆதரவிற்காக ஆவலுடன் காத்திருந்த மின்சார வாகனத் துறைக்கு வரவேற்கத்தக்க நிவாரணமாக EMPS 2024 திட்டம் இருக்கும். இந்த நடவடிக்கை மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டில் இருசக்கர மின்சார வாகனங்களின் பதிவு 27% குறைந்து 2,22,267 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 3,04,918 யூனிட்டுகளாக இருந்தது. மார்ச் 2024-இல் மின்சார வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 1,40,167 ஆக உயர்ந்தாலும், அதன்பின்னர் 3 மாதங்களில் மீண்டும் மானியம் குறைக்கப்பட்டதால் 65,000 முதல் 75,000 யூனிட்டுகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின்சார வாகன விற்பனை சற்று அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் மற்றும் ஏதர் போன்ற நிறுவனங்களும், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் போன்ற பாரம்பரிய நிறுவனங்களும் மின்சார இருசக்கர வாகன பிரிவில் தங்கள் முயற்சிகளை அதிகரித்து வருகின்றனர். EMPS 2024 மூலம் அரசின் புதுப்பிக்கப்பட்ட ஆதரவுடன், இந்தத் துறை சமீபத்திய பின்னடைவுகளை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+