டெல்லி: இந்தியாவை உலகளவில் முன்னணி தொழில்நுட்ப டெக்ஸ்டைல் உற்பத்தியாளராக மாற்றுவதற்கான இலக்குடன், ஜவுளி அமைச்சகம் (Union Textiles Ministry) புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டத்தின் கீழ், உயர்தர தொழில்நுட்ப டெக்ஸ்டைல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் 150 ஸ்டார்ட் அப் நிறுவங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Kevlar, Spandex, Nomex மற்றும் Twaron போன்ற தொழில்நுட்ப ஜவுளிகள் பயன்பாடு விண்வெளி, பாதுகாப்பு, ஆட்டோமொபைல், சுகாதாரம், கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ஜவுளி அமைச்சகம் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது. வணிகத்தின் லாபத்தில் எந்தப் பங்கையும் அமைச்சகம் கோராது என்றும் கூறப்படுகிறது.

தேசிய தொழில்நுட்ப டெக்ஸ்டைல் மிஷன் (National Technical Textiles Mission - NTTM) திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மிஷன், ஆராய்ச்சி மற்றும் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
KPMG அறிக்கையின்படி, இந்திய தொழில்நுட்ப டெக்ஸ்டைல் சந்தை உலகளவில் 5வது பெரிய சந்தையாகும். 2021ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, இதன் மதிப்பு $ 21.95 பில்லியன் ஆக இருந்தது. மேலும் உற்பத்தி $ 19.49 பில்லியன் மற்றும் இறக்குமதி (Import) மதிப்பு $ 2.46 பில்லியன் ஆக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய தொழில்நுட்ப டெக்ஸ்டைல் சந்தை ஒரு ஆண்டுக்கு 8% முதல் 10% வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை 15% முதல் 20% ஆக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகளவில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல் சந்தையின் மதிப்பு 2022ஆம் ஆண்டில் $ 212 பில்லியன் டாலராக இருந்தது, 2027ஆம் ஆண்டில் $ 274 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022 முதல் 2027ஆம் ஆண்டுகளில் 5.2 சதவீத CAGR விகிதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல்களின் தேவை அதிகரிப்பது புதுமையான தயாரிப்புகள் விரைவாக உருவாகுவதே இதற்குக் காரணம் என்று KPMG நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
தொழில்நுட்ப டெக்ஸ்டைல் என்றால் என்ன?: பாரம்பரிய துணி வகைகளை விட அதிக பலம், வெப்ப எதிர்ப்பு திறன் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட துணி வகைகளே தொழில்நுட்ப டெக்ஸ்டைல்கள் ஆகும்.
யாருக்கு இந்த நிதி கிடைக்கும்?: உயர்தர தொழில்நுட்ப டெக்ஸ்டைல் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு இந்த நிதி கிடைக்கும். உதாரணமாக, மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் ஸ்டெர்லைஸ் (sterilise) செய்யப்பட்ட துணி வகைகள், கட்டுமான துறையில் பயன்படுத்தப்படும் வெப்ப திறன் (heat resistance ability) கொண்ட கூரைகள், விமான போக்குவரத்து துறைக்கு பயன்படும் (fire retardant) துணி வகைகள் போன்ற புதுமையான தயாரிப்புகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்கள் இந்த நிதியைப் பெற தகுதி உடையவை.
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?: இந்தியாவில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல் துறையை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுகிறது. இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்கும். இந்தியாவை உலகளவில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல் துறையில் முன்னணி நாடாக மாற்றுவதற்கு உதவும்.
அரசின் இந்த புதிய திட்டம், இந்தியாவில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறையில் ஆர்வமுள்ள வெவ்வேறு தொழில்முனைவோர், இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறலாம்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications