ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு குட் நியூஸ்.. இந்த ஒரு APP போதும்.. இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை!

நாட்டில் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை ரேஷன் கடைகள் முலமாக வழங்குகின்றன. இதில், அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்படுகின்றன.

எனவே, இந்த பொருட்களை வாங்க பொதுமக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கின. அதனை மேம்படுத்தி கைரேகை பதிவுடன் க்யூ ஆர் கோடுடன் ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது ரேஷனில் பொருட்களை வாங்க ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு எதுவே தேவையில்லை. இதற்காக அரசு புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு குட் நியூஸ்.. இந்த ஒரு APP போதும்.. இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை!


இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் இந்த ஒரு ஆப் வைத்திருந்தாலே போதும். அந்த ஆப் ஆனது மத்திய அரசின் மேரா ரேஷன் 2.0 என்ற ஆப் (APP) கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எப்படி பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது? என்பது குறித்து விரிவாக பார்க்கலம். அதேபோல், இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது குறித்து கீழே பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது:
பொதுமக்கள் அனைவரும் மேரா ரேஷன் 2.0 ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Download செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு, ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்ட வேண்டும், இதையடுத்து ஒரு ஓடிபி வரும் அது மூலம் உள்நுழைய வேண்டும்.

இதனை தொடர்ந்து, ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவம் திரையில் தோன்றும். அதை காண்பித்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

எனவே, இனி பொதுமக்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது ரேஷன் கார்டை அவசரத்தில் மறந்து வைத்து விட்டோ கவலைப்பட தேவையில்லை. இந்த ஒரு ஆப்-ஐ மொபைலில் பதிவிறக்கம் செய்த இந்த மேரா ரேஷன் 2.0 செயலியை ரேஷன் கடைகளில் காண்பித்தால் நீங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே உடனே மேரா ரேஷன் 2.0 செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+