வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ. 78,000 கோடி! உரியவர்களுக்கு பணம் சென்றடைய அரசு ஏற்பாடு!

நம்ம நாட்டுல எண்ணற்ற பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இயங்கி வருது. இப்படி இயங்கி வரும் வங்கிகள்ல பலர் தங்களுடைய பணத்தை இன்னும் எடுக்காம வச்சிருக்காங்க! அதாவது உரிமை கோராமல் இருக்கும் பணம் ரூ. 78,213 கோடியை நெருங்கியுள்ளது. இந்தப் பணத்தை கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களுடைய நாமினி எளிதா எடுக்கும் வகையில் புது ரூல்ஸ் வரப்போகுது. நிறைய பேர் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டு அதுல காசு போட்டுட்டு அப்படியே மறந்துடறாங்க.

சில நேரங்கள்ல பணத்தை போட்டவர்கள் துரதிஷ்டவசமா இறந்து போயிடுறாங்க. இதனால் அவர்களுடைய வாரிசுக்கும் போகாமல் கணக்கு தொடங்கியவர்களுக்கும் போகாமல் பணம் அப்படியே வங்கிகளில் தேங்கி விடும். இப்படி பல காரணங்களால் பேங்க் அக்கவுண்ட்ல நிறைய பேரோட பணம் அப்படியே இருந்து வருது. இந்தப் பணம் சில நாட்கள் கழித்து ரிசர்வ் பேங்கிற்கு சென்றுவிடும். உரிமை கோரப்படாத பணம் இறுதியில் ரிசர்வ் பேங்கை தான் சென்றடையும்.

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ. 78,000 கோடி! உரியவர்களுக்கு பணம் சென்றடைய அரசு ஏற்பாடு!

இப்படி சேர்ந்த பணம், கிட்டத்தட்ட ரூ. 78,213 கோடி கரண்ட்ல இருக்குன்னு சொல்லப்படுது. இந்த பணம் யாருடையதோ அவங்களுக்கே திருப்பி கொடுக்கணும்னு அரசு முடிவு பண்ணிருக்கு. அதுக்கு சில புது வழிமுறைகள கொண்டு வர போறாங்க.

இதுக்காக எல்லா பேங்குகளும் ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் அதுகூட சில முக்கியமான டாக்குமெண்ட் லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்காங்க. இந்த ரூல்ஸ் வந்தா அக்கவுண்ட்ல காசு வச்சிருக்கறவங்க அல்லது அவங்களோட நாமினிகள் அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ பூர்த்தி செய்து பிற டாக்குமெண்ட்களை சேர்த்து கொடுத்தால் போதும். பணத்தை ஈசியா எடுத்துக்க முடியும்.

அப்ளிகேஷன் ஃபார்ம்ல உங்களோட பேரு, போன் நம்பர், அட்ரஸ் இதெல்லாம் எழுதி.. மீதி என்னென்ன டாக்குமெண்ட் தேவையோ அதை அட்டாச் பண்ணி கொடுத்தீங்கன்னா வெரிஃபிகேஷன் செயல்முறை செஞ்ச பிறகு, உங்க பணத்தை அக்கவுண்டுக்கே ட்ரான்ஸ்பர் செஞ்சிடுவாங்க.

உரிமைக்கோராத பணம் வங்கிகள்ல இருப்பது ரொம்ப காலமா இருக்கிற பிரச்சினையா பார்க்கப்படுது. இதை சரி செய்ய பேங்க்ல இருக்கிற பெரிய பெரிய ஆபீஸர்ஸ் எல்லாம் ஒன்னு சேர்த்து ஒரு டீம் மாதிரி அமைச்சாங்க. அந்த டீம் சொன்ன கோரிக்கையின் அடிப்படையில் தான் இந்த புது ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்க. இதை எப்படி ஈஸியா பண்ணலாம்னு இப்போ ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு இருக்காங்க

2026 ஆம் ஆண்டிலிருந்து, உரிமைக்கோராத பணத்தை ஈசியா எடுக்கறதுக்கு ஆன்லைன்லயும் வசதிகள் வரப்போகுதுன்னு சொல்லப்படுது. அப்படி நடந்த ரொம்ப ஈஸியா உரிமை கோரப்படாத பணத்தை எடுக்க முடியும்.

Take a Poll

யாருமே பணத்தை எடுக்காமல் அப்படியே விட்டுட்டா அக்கவுண்ட்ல இருக்கிற பணம் ஆர்பிஐ-யோட டிஇஏ ஃபண்டுக்கு போய்டும். போன வருஷம் மட்டும், இதுவரையும் இல்லாத வகையில 26 சதவீதத்துக்கும் அதிகமா இந்த பண்டுக்கு பணம் போயிருக்கு. இந்த ஒரு விஷயத்துக்காக தான் ஒரு அக்கவுண்டுக்கு 4 நாமினி வர இருக்கலாமனு புது ரூல்ஸ் கொண்டு வந்து இருக்காங்க. அக்கவுண்ட் வச்சிருக்கவங்களுக்கு ஏதாவது பாதிப்புன, நாமினி பணத்தை எடுத்துக்க முடியும்.

எது எப்படியோ இது போல புது ரூல்ஸ் கொண்டு வந்தா ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச பணம் அவங்களுக்கோ அல்லது அவங்க குடும்பத்துக்கோ ஈஸியா போய் சேரும். இது போன்ற விதிகளை சீக்கிரமா அமல்படுத்தனுங்கிறது தான் பலரோட கோரிக்கையா பார்க்கப்படுது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+