மலிவான விலையில் வீடு தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக அரசாங்கம் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அரசு ஒரு புதிய போர்ட்டலை தொடங்கியுள்ளது. இந்த போர்ட்டலின் பெயர் "பேங்க்நெட்" ஆகும்.வங்கிகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் பறிமுதல் செய்யப்பட்டு, மலிவான விலையில் ஏலம் விடப்படும் சொத்துக்களை இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் வாங்கலாம். இதில் வணிக சொத்துக்கள், கடைகள், தொழில் துறை நிலங்கள், விவசாய நிலங்கள், விவசாயம் அல்லாத நிலங்கள் ஆகியவை கிடைக்கும்.
BAANKNET எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்ட்டலில், அனைத்து அரசு நிறுவனங்களின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். இந்த தகவலை நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. வங்கிகள், அரசு நிறுவனங்கள், கடனை செலுத்தாத பட்சத்தில் அல்லது வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் இந்த தளத்தில் மலிவு விலையில் விற்கப்படுகின்றன.

ஒரு வேலை சொத்துக்களை வைத்து கடன் பெற்றிருந்தால் அதை செலுத்தாத பட்சத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அவற்றைக் கையகப்படுத்தி அதன் பிறகு ஏலம் விட்டு, தங்கள் கடன் தொகையைப் பெற்றுக் கொண்டு மீதி உள்ள தொகையை கடன் பெற்றவருக்கு வழங்கும். இதுபோன்ற சொத்துக்கள் மிகவும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும். ஆனால் பொதுமக்களால் ஒரே நேரத்தில் இது போன்ற சொத்துக்கள் விற்கப்படுகிறதா? என்ற தகவல்களைப் பெற முடியாது.
இப்போது இந்த போர்ட்டல் மூலம் மலிவான விலையில் விற்கப்படும் சொத்துக்கள் குறித்த தகவல்களை பெற முடியும். இது போன்ற அனைத்து சொத்துக்களையும் நீங்கள் ஒரே இடத்தில் பார்க்கலாம். இந்த பேங்க் நெட் போர்ட்டலில் 1,22,000 சொத்துக்கள் உள்ளன. அதைச் சென்று பார்த்து நீங்கள் விரும்பிய மலிவான சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த தளம் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. நிதி அமைச்சகத்தின் செக்கரட்டரி எம்.நாகராஜ் வெள்ளிக்கிழமை அன்று இந்த போர்ட்டலை அறிமுகப்படுத்தி வைத்தார். நிதி அமைச்சர் கூற்றுப்படி, BAANKNET என பெயரிடப்பட்ட இந்த போர்ட்டல் அனைத்து பப்ளிக் செக்டார் பேங்குகள் அல்லது அரசு வங்கிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் தகவல்களை ஒன்றாக வழங்கும். இவை வங்கிகளால் ஏலம் விடப்படும் சொத்துக்கள் என்பதால் குறைந்த விலையில் இருக்கும்", என்று தெரிவித்துள்ளது.
இந்தப் போர்ட்டல் மூலம் வங்கிகளின் சொத்து ஏலத்தில் நீங்கள் நேரடியாக பங்கேற்கலாம். அதற்கு இந்த போர்ட்டலுக்குச் சென்று நீங்கள் சொத்தை வாங்க விரும்பும் நகரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வாங்க விரும்பும் சொத்தின் வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது வணிக சொத்தா, குடியிருப்பு சொத்தா, வீடு, கடை என உங்களின் விருப்பத்தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் சொத்தை வாங்க விரும்பும் தொகையையும் நீங்களே தேர்வு செய்யலாம். அனைத்து விவரங்களையும் வழங்கிய பிறகு முழுமையான பட்டியல் தோன்றும் மற்றும் அதில் விரிவான தகவல்களும் இருக்கும். அதோடு தரமான புகைப்படங்களும் பதிவிடப்பட்டிருக்கும். அதை பார்த்து நீங்கள் சொத்தின் முழுமையான மதிப்பீட்டையும் பெறலாம். நீங்கள் விரும்பும் சொத்து அருகில் இருந்தால் அதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு பதிவு படிவம் தோன்றும். அதில் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அதை பூர்த்தி செய்தால், மின் ஏல அட்டவணை தோன்றும். இதை வைத்து சொத்துக்களை வாங்க விரும்புபவர்கள் மலிவான விலையில் வாங்கி பலனடையலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications