இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாகவும், வெளிநாடு செல்வதற்கான பிரதான ஆவணமாகவும் பாஸ்போர்ட் இருக்கிறது. இதற்கு முன்பு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது என்றால் மாத கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் தொழில்நுட்பங்களின் வருகை அதனை மாற்றிவிட்டது.
தற்போது ஆன்லைனிலேயே பாஸ்போர்டிற்கு விண்ணப்பம் செய்துவிடலாம். எந்த இடைத்தரகரும் தேவையில்லை. தற்போது ஆன்லைன் விண்ணப்ப முறையை மேலும் எளிதாக்கும் வகையில் வரும் 15ஆம் தேதியிலிருந்து பல்வேறு முக்கியமான மாற்றங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றனர். நீங்கள் புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் சரி இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

போலி பாஸ்போர்ட்களை தயாரித்து ஆங்காங்கே மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த மோசடிகளை தடுக்கும் வகையிலும் பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்கும் வகையிலும் வரும் 15 ஆம் தேதியிலிருந்து புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளின் படி இதற்கு முன் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது அது மாற்றப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையிலேயே ஆவணங்கள் சரிபார்ப்பு நடத்தப்படும். என்வே ஆதார் உள்ளிட்டவற்றை நகல்களை கொண்டு சென்று தாக்கல் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதன்படி நம்முடைய அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றிதழாக ஆதார் மற்றும் அரசால் வழங்கப்பட்ட ஆவணங்கள் பிரதான ஆவணங்களாக பயன்படுத்தப்படும். இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையிலேயே சமர்ப்பித்து டிஜிட்டல் முறையிலேயே சரிப்பார்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வழக்கமாக பாஸ்போர்ட் விநியோகத்தில் போலீஸ் வெரிஃபிகேஷன் எனப்படும் காவல்துறையினர் சரிபார்ப்பு தான் தாமதமாகும். ஒரு நபர் பாஸ்போர்ட் வேண்டும் என விண்ணப்பம் செய்தால் அவருடைய பின்புலத்தை விசாரித்து காவல்துறை சான்றிதழ் தர வேண்டும். இதனால் நமக்கு பாஸ்போர்ட் கிடைப்பதும் தாமதமாகிறது.
ஆனால் இந்த புதிய நடைமுறைகளின் படி அனைத்துமே டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு விடும். காவல்துறையினர் ஆன்லைனிலேயே தகவல்களை பரிமாற்றம் செய்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே காவல்துறை சரிபார்ப்பினால் ஏற்படக்கூடிய தாமதம் இனி இருக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்ப போர்ட்டலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
ஆன்லைனிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பணம் செய்வது, ஆவணங்களை அப்லோடு செய்வது, அப்பாயின்மென்ட் தேதி புக்கிங் செய்வதை எளிமையாக்குவது , நிகழ் நேரத்தில் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை கண்டறிவது ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்டுக்கு டிஜிட்டல் முறையிலேயே அவர்களின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications