டெல்லி: ஒரு புறம் மத்திய அரசினை ஆட்டிப் படைத்து வரும் பொருளாதார மந்த நிலையை போக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்பிரச்சனையிலிருந்து எப்படியேனும் மேலே வர வேண்டும் என அரசு ஒரு புறம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு சில அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பங்குகளை விற்க அரசு முடிவு
அதிலும் பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது. அதிலும் ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும், இதே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளையும், தே கண்டெய்னர் கார்ப் நிறுவனத்தின் 30.8 சதவிகித பங்குகளையும் விற்க அரசு முடிவெடுத்துள்ளது.
பட்ஜெட்டில் துண்டு விழலாம்
இவ்வாறு இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பட்ஜெட்டில் பற்றாக்குறை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசு எதிர்பார்ப்பது போல் இந்த தனியார்மயம் இல்லை எனில் அரசு பட்ஜெட்டில் 40,000- 50,000 கோடி ரூபாய் துண்டு விழும் எனவும் எதிர்பார்க்கிறது.
நிதி பற்றாக்குறை பிரச்சனை அதிகரிக்கும்
ஒரு புறம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தான் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் விளைவாக ஏற்கனவே அரசு பல்வேறு வரி விகிதங்களை மாற்றம் செய்து வருகிறது. இதனால் வரி வசூல் குறையும். இந்த நிலையில் அரசின் நிதி பற்றாக்குறை இலக்கான 3.3 சதவிகித இலக்கை இது மீறக்கூடும். ஆக தற்போதுள்ள பிரச்சனையை விட இது அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
மார்ச் 2020 தான் இலக்கு
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு மார்ச் 2020க்குள் இலக்கு வைத்துள்ள நிலையில், அரசின் இந்த கனவு சாத்தியமாவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆக அரசுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றும் பெயர் தெரியாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இதனால் பட்ஜெட்டில் ஒரு இடைவெளியை காணும். அரசு தற்போதுள்ள மந்த நிலையை போக்க கார்ப்பரேட் வரி குறைப்பு, ஜிஎஸ்டியில் சில மாற்றங்கள் என பலவகையிலும் மாற்றம் செய்துள்ளது.
வருவாயும் குறையும்
மந்தநிலை நீடித்து வரும் இதே வேளையில் வரி வருவாயும் கணிசமான அளவு குறையும். ஆக இதனால் இந்த கணிசமான பற்றாக்குறையும், சில உள்கட்டமைப்புகளில் முதலீடுகளையும் செய்ய, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதால் கிடைக்கும் தொகை உதவும் என்றும் அரசு நம்புகிறது. ஆக இந்த நிலையில் தனியார்மயம் கனவு தற்போதைக்கு நிறைவேறுமா? நிறைவேறாதா? என்ற நிலை நிலவி வருகிறது. ஆக வரவிருக்கும் காலம் அரசுக்கு இது மிகப்பெரிய சவாலாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்
சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று இந்திய அரசாங்கத்தை அதன் வரவு செலவுத் திட்டத்தை மேம்படுத்தவும், நிதி அறிக்கையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வலியுறுத்தியது. மேலும் வரி குறைப்பு செய்தால் மட்டும் போதாது, வருவாயை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பங்கு விற்பனை மூலம் எவ்வளவு கிடைக்கும்?
பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 1.05 டிரில்லியன் ரூபாய் திரட்ட முடியும் என்றும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இதில் இதுவரை வெறும் 17,364 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக அரசு நிர்ணயித்த இலக்கை விட நடப்பு கணக்கு பற்றாக்குறை 50 அடிப்படை புள்ளிகள் குறையலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications