ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனை குறித்து இந்திய அரசு சமீப ஆண்டுகளாகவே தொடர்ந்து கூறி வருகின்றது. இந்த பங்கு விற்பனையில் அரசின் வசம் உள்ள குறைந்தபட்சம் 51% பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பங்கு விற்பனையானது தீபாவளி சமயத்தில், அதாவது அக்டோபர் மாத இறுதி வாரத்தில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கும், எல்ஐசி நிறுவனத்துக்கும் சேர்த்து, மொத்தமாக 94.71% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் அரசின் வசம் உள்ள பங்குகள் கணிசமான பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பங்கு விற்பனை திட்டம்
ஓரு புறம் அரசின் வசம் உள்ள பங்குகள் குறைக்கப்படலாம் என்றாலும், எல் ஐ சி தன் வசம் இருக்கும் பங்கினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு வருமானம்?
இதன் மூலம் எல் ஐ சி மற்றும் மத்திய அரசு இணைந்து 61% பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியில் சமீபத்திய ஆண்டுகளாக நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பல்வேறு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
தனியார் வசம் நிர்வாகம்
முன்னதாக ஒரு அறிக்கையில், இந்த பங்கு விற்பனைக்கு பிறகு இவ்வங்கியின் முழு நிர்வாகமும் தனியார் கையில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் தனியார் வங்கியாக சுதந்திரமாக ஐடிபிஐ செயல்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முதலீட்டாளர்கள் வசம்
இதில் இந்திய ரிசர்வ் வங்கி முதலீட்டாளர்கள் 40%-க்கும் அதிகமான பங்கினை வாங்க அனுமதிக்கலாம் என்று செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது தான் இறுதி முடிவுகள் என்ன என்பது முழுமையாக் தெரிய வரும்.
இன்றைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.74% அதிகரித்து, 41.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 41.65 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 40.10 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 2.74% அதிகரித்து, 41.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 41.65 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 30.50 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 65.25 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 30.50 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications