இந்திய ஐடி சேவை துறை 2008 ரெசிஷன்-க்கு பின்பு பல பாதிப்புகளை எதிர்கொண்டு இருந்தாலும், எந்தொரு காலக்கட்டத்திலும் ஐடி ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்தது இல்லை. அதிலும் குறிப்பாக டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வேரியபிள் பே ஆகியவற்றையும் முழுமையாக கொடுத்துள்ளது, இதேபோல் பணிநீக்கம் செய்தது கிடையாது.
ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, ஊழியர்களின் திறன் குறைப்பாடு, வர்த்தக சந்தையில் கிடைக்கும் புதிய வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தேவை ஆகியவற்றில் பெரும் மாற்றம் நடந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப நிறுவவனத்தையும், வர்த்தகத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையில் வழிநடத்த சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாத்தில் உள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது ஊழியர்கள் படையில் சுமார் 2 சதவீதத்தினரை, அதாவது 12,000 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக ஜூலை 27, 2025 அன்று டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் மணிகன்ட்ரோல் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வெளியான பிறகு இந்திய ஐடி மற்றும் டெக் துறையில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது என்றால் மிகையில்லை. இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோர் சந்தைக்கும் ஐடி துறை நெருங்கிய தொடர்பை கொண்டு இருக்கும் காரணத்தால் டிசிஎஸ் அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசும் களத்தில் இறங்கியுள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) டிசிஎஸ் பணிநீக்க அறிவிப்பையும், அதன் செயல்பாடுகளையும் மிகவும் நெருக்கமாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே NITES அமைப்பு மத்திய அரசிடம் ஐடி ஊழியர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து குற்றச்சாட்டுகளை சமத்தி வரும் வேளையில் இந்த மாஸ் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் டிசிஎஸ்-ன் இந்த முடிவு மற்ற நிறுவனங்களையும் இத்தகைய மாஸ் பணிநீக்கத்தை அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் MeitY அமைச்சகம் ஐடி துறையின் இந்த நிலைமையை கவனித்து, தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் மத்திய அரசு ஐடி துறையில் பணிநீக்கத்தை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது. உதாரணமாக 2008 ரெசிஷன் காலக்கட்டத்தில் இத்துறையை மட்டும் அல்லாமல் இத்துறையை நம்பியிருக்கும் நாட்டின் நுகர்வை காக்கும் விதமாக வட்டி விகிதம் குறைத்தது, கூடுதலாக பணபுழக்கத்தை சந்தையில் கொண்டு வந்தது என பல விஷயங்களை செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற முடிவுகளை நிலைமை மோசமாகும் போது மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளது.

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனங்களும், கல்வி அமைப்புகளும் இணைந்து மாணவர்களுக்கான திறமை மேம்பாடு (skilling) மற்றும் மறுநிலை பயிற்சி (re-skilling) பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. "டெக் துறையில் நடந்து வரும் இந்த மாற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். தொழில்நுட்ப உலகமும் கல்வி நிறுவனங்களும் இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாக மணிகன்ட்ரோல் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஜூலை 1, 2025 அன்று யூனியன் கேபினெட் ரூ.99,446 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு இணைப்பு உறுதியளிக்கும் (ELI) திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இந்திய நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், குறிப்பாக உற்பத்தி துறையில் கவனம் செலுத்தவும் நோக்கமாக உள்ளது.
இந்த திட்டம் அடுத்து இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் IT துறையில் ஏற்படும் வேலைவாய்ப்பு இழப்பை சரி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications