மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!!

இந்தியாவில் பல்வேறு மருந்து உற்பத்திக்கான மூல பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட சில மருந்து பொருட்களுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.

பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளின் உற்பத்திக்கு தேவையான active pharmaceutical ingredients எனப்படும் மூலப்பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க உள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டால் பல்வேறு மருந்து உற்பத்திக்கான செலவுகளை அதிகரித்து மருந்துகளின் விலை உயரும் என நிறுவனங்கள் கூறுகின்றன.

மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!!

எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசு வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படக்கூடிய மருந்து தயாரிப்பு பொருட்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்திருக்கிறது என கூறுகிறது. பெரும்பாலும் சீனாவில் இருந்து இந்த மருந்து தயாரிப்பு மூலப் பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன இதனால் உள்நாட்டை சேர்ந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான் மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது .

ஆனால் இது மருந்துகளின் விலையை உயர்த்தும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பென்சிலின், அம்மாக்சிலின் போன்ற முக்கியமான மருந்துகளுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை அரசு நிர்ணயம் செய்ய இருக்கிறது. இவை அனைத்துமே ஆண்டிபயாடிக் மருந்துகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மூல பொருட்கள்.

எனவே இவற்றுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்துவிட்டால் நிறுவனங்கள் கட்டாயம் அந்த தொகையை கட்டி தான் வாங்கி வேண்டி இருக்கும். இது மருந்து உற்பத்திக்கான செலவு அதிகரிக்க செய்து மருந்து மாத்திரைகளின் விலையையும் உயர்த்தும் என கூறியிருக்கின்றனர். குறிப்பாக இந்த துறை சார்ந்த இயங்கக்கூடிய எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படுமாம்.

10,000 அதிகமான எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எக்னாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது இதன் மூலம் 2 லட்சம் வேலை இழப்புகள் நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியா மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இறக்குமதியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது அந்த நிலையை மாற்றி சுயசார்பு நிலைக்கு இந்தியா செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டு முதலே மத்திய அரசு உற்பத்தி இணைக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தில் அரிய வகையிலான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. எனவே பலரும் இந்த பிரிவில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் இந்த இறக்குமதி விலை நிர்ணயம் மருந்துகளின் விலையை 40% வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+