அதிக நீளமான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு புதிய சுங்கக் கட்டண விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கட்டமைப்புகள் (மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள்) 50% க்கும் அதிகமான பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் சுங்கக் கட்டணம் பாதியாக குறைக்கப்படும். முன்பு இத்தகைய கட்டமைப்புகளுக்கான சுங்கக் கட்டணம் சாதாரண கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது அது சாதாரண சுங்கத்திற்கு 5 மடங்கு அதிகமாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய சுங்கக் கட்டணம் : இதன் மூலம் பயணிகள் சுங்க கட்டணத்தில் குறைவினைப் பெறுவார்கள். அதேசமயம் கட்டமைப்புகள் அதிகமான வழிகளில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பாக சாலைகளை பயன்படுத்த முடியும். சாலை போக்குவரத்து அமைச்சகம் அடுத்த சில நாட்களில் புதிய சுங்கக் கட்டண விதிமுறையை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறை, இரண்டு அண்டை நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை பகுதிகள், மத்திய அரசால் கட்டப்பட்ட ரிங் ரோடுகள் மற்றும் புறவழிச்சாலைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு சுங்கக் கட்டண நிவாரணத்தை வழங்கும்.

வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி : முக்கியமாக, நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படும் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கொண்ட கட்டமைப்புகளுக்கு இந்த நிவாரணம் பொருந்தும். உதாரணமாக, டெல்லியில் உள்ள துவாரகா விரைவுச் சாலை இதற்கு பொருந்தும். இதன் மூலம் பயணிகள் கட்டண சுமையை குறைக்க பலன் பெறுவார்கள் என்றும், பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்தை அனுபவிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தேசிய நெடுஞ்சாலைகள் (NH) கட்டண விதிகளின்படி, மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கான சுங்கக் கட்டணம் வழக்கமான நெடுஞ்சாலைப் பகுதியின் ஒரே கிலோமீட்டருக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு காரணம் மேடான பாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளை கட்டுவதற்கு அதிக முதலீடு மற்றும் செலவு தேவைப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த செலவுகளை மீட்டெடுக்க இந்த உயர்ந்த கட்டண விதி அமல்படுத்தப்படுகிறது. இதனால், பயணிகள் இந்த கட்டமைப்புகளை பயன்படுத்தும்போது அதற்குரிய உயர்ந்த கட்டணத்தை கட்ட வேண்டியிருக்கும்.
கட்டணம் எவ்வளவு குறையும்..?: துவாரகா விரைவுச் சாலையில் 28.5 கி.மீ நீளம் கொண்ட ஒரு வழிப் பயணத்தில், தற்போது விதிக்கப்படும் கட்டணப்படி, 21 கி.மீ நீளமான கட்டமைப்புப் பகுதிக்கு ரூ.306 மற்றும் மீதமுள்ள 7 கி.மீ.க்கு ரூ.11 என மொத்தம் ரூ.317 செலவாகும். ஆனால், புதிய கட்டண விதிமுறையின் படி, கட்டமைப்புப் பகுதிகளுக்கான கட்டணத்தை பாதி குறைத்ததால், இந்த செலவு ரூ.153 ஆகக் குறையும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இதனால் பயணிகளுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் தனியார் கார்களுக்கு வழங்கும் வருடாந்திர சுங்கச்சாவடி திட்டத்தை பயன்படுத்தும் கார் உரிமையாளர்களுக்கு புதிய விதி மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த மாற்றம் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கு அதிக நன்மையை தரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications