மத்திய அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில், கடன் வாங்கியோருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்களை எடுக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. சிறை தண்டணை விதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மசோதாவிற்கு தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்க அரசு முடிவெடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் இல்லாமல் கடன் வழங்கினால் கடுமையான நடவடிக்கை பாயும்.

இது நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, ரிசர்வ் வங்கியின் கீழ் பணி குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையின்படி, உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில், கடன் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, 'பியுலா' எனப்படும் ஒழுங்கற்ற கடன் நடவடிக்கைகளை தடை செய்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனி ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் மற்றும் நிறுவங்கள் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும். இதனை இந்த மசோதா தடை செய்கிறது. உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனி நபர் அல்லது நிதி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 2 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் ஆப்ஸ் போன்ற வழிகளிலோ அல்லது வேறு ஏதாவது வழிகளிலோ கடன் கொடுத்து அதனை மீட்பதின் பேரில் அநாவசியமாக மக்களை துன்புறுத்தினாலோ, சட்டவிரோத வழிகளை பயன்படுத்தினாலோ, மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், கடன் கொடுத்தவர்கள்,கடன் வாங்குபவர்கள் கணக்குகள் வெளிமாநிலங்களிலோ அல்லது நம் நாட்டிற்கு வெளியே அமைந்திருந்தாலோ, அது தொடர்பான விசாரணைகள் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications