இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ்-இன் அறிக்கையின் படி EPFO அமைப்பின் கீழ் உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சூக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இது முன்பு ரூ.50,000 ரூபாயாக இருந்தது.
EPFO உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளான திருமணம், மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி செலவு என தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தி உள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

EPFO அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கான பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக டிஜிட்டல் சேவையை மேம்படுத்துதல், அதன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எளிதாக பதில் அளிப்பது மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக தற்போது வேலையில் சேர்ந்து இன்னும் 6 மாதங்கள் முடிக்காத புதிய பணியாளர்களும் முந்தைய கட்டுப்பாட்டில் இருந்து மாற்றமாக தங்களுடைய சேமிப்பை திரும்ப பெற தகுதி பெற்றுள்ளனர்.
திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற செலவுகளைச் சமாளிக்க மக்கள் பெரும்பாலும் தங்கள் EPFO சேமிப்பை நம்பியுள்ளனர். இதற்காக தான் ஒரே நேரத்தில் பணம் எடுக்கும் வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளோம்" என்று மாண்டவியா கூறியுள்ளார்.
EPFO அமைப்பின் PF தொகையானது 10 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஓய்வூதிய வருமானத்தை வழங்குகிறது மற்றும் பல தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சேமிப்புக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. EPFO சேமிப்பின் வட்டி விகிதம், 2024-ஆம் நிதியாண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், EPFO அமைப்பின் கீழ் இல்லாத நிறுவனங்கள் தங்கள் சொந்த ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தலாம். 1954-இல் EPFO உருவாக்கப்படுவதற்கு முன்பே அவர்களின் நிறுவனம் நிறுவப்பட்டதால், சில வணிகங்கள் விலக்கு காரணமாக தங்கள் சொந்த ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
இதுபோன்ற 17 நிறுவனங்கள் மொத்தம் 100,000 பணியாளர்களோடு இயங்கி வருகின்றன. அவர்கள் தங்கள் சொந்த நிதிக்கு பதிலாக EPFO -க்கு மாற விரும்பினால், அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அரசாங்கத்தின் PF சேமிப்பு சிறந்த மற்றும் நிலையான வருமானத்தை அளிக்கிறது, என்றும் மாண்டவியா கூறியுள்ளார்.
ஆதித்ய பிர்லா லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இந்த ஏற்பாட்டைக் கோரி அரசாங்கத்தை தொடர்பு கொண்டதாகவும் ஒரு அதிகாரி கூறினார். சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்புக்கான வருமான வரம்பை ரூ.15,000 ரூபாயிலிருந்து உயர்த்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் உருவாக்கி வருவதாக அமைச்சர் அறிவித்தார். கூடுதலாக, தற்போது ரூ.21,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக்கான வருமான வரம்பும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.15,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியத்திற்காகத் தாங்கள் ஒதுக்க விரும்பும் வருமானத்தின் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் வசதியைப் பெறுவார்கள் என்றும் மாண்டவியா கூறியுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications