செயல்படாத ஜன்தன் யோஜனா கணக்குகளில் ரூ.14,750 கோடி பேலன்ஸ்.. அரசு என்ன செய்யப் போகிறது?

இந்தியாவில் உள்ள அனைவருமே வங்கி சேவை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் "பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா". இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. 2014-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று சுதந்திர தின உரையின் போது நரேந்திர மோடி இந்தத் திட்டத்தை அறிவித்தார். அதன் பின்பு பொதுத்துறை வங்கிகளில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 54.03 கோடி கணக்குகள் இதுவரையில் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 11.30 கோடி கணக்குகள் செயல்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நவம்பர் 2024 நிலவரப்படி ரூ.14,750 கோடி பேலன்ஸ் செயல்படாத கணக்குகளில் உள்ளதாக தெரிவித்தார்.

 செயல்படாத ஜன்தன் யோஜனா கணக்குகளில் ரூ.14,750 கோடி பேலன்ஸ்.. அரசு என்ன செய்யப் போகிறது?

பொதுத்துறை வங்கிகளில் செயல்படாத ஜன்தன் யோஜனா கணக்குகளின் சதவிகிதம் 2017-ஆம் ஆண்டில் 39.62 சதவீதமாக இருந்தது. 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 20.91 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வாடிக்கையாளர் கணக்குகளில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அவை செயலற்றதாகக் கருதப்படும்.

செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகள் குறித்து கண்காணிக்க வங்கிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த முயற்சிகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் பங்கஜ் கூறியுள்ளார். மேலும் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மூலம் கேஒய்சி-யை புதுப்பிக்கவும், செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே செயல்படாத வங்கி கணக்குகளுக்கு நாமினியை அதிகரிக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு வங்கி கணக்கில் தற்போது 1 நாமினியை பரிந்துரைக்கும் வசதி உள்ளது. அதையும் மீறி நாமினியை பரிந்துரைக்காத வங்கி கணக்குகளின் உள்ள தொகையை குறைக்கும் முயற்சியில் தற்போது 4 நாமினிகளை நியமிக்கும் வசதியை கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது.

கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில் நாமினிக்கு அந்த கணக்கில் உள்ள தொகை போய் சேரும். ஒருவேளை ஒரு வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால் அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகள் அந்த தொகையை பெற தகுதியுடையவர்கள் என்றாலும்.. நாமினி இல்லாத பட்சத்தில் கணக்குகளில் இருந்து பணத்தை பெறுவது சிக்கலாகலாம்.

ஜன்தன் யோஜனா கணக்குகளில் மீதமுள்ள 14,750 கோடி போலவே பிற வங்கிகளில் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்டுகளிலும் அதிக அளவிலான தொகை இருப்பில் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+