500 ரூபாய விட 1 ரூபாய் தான் காஸ்ட்லி.. எப்படி தெரியுமா..? காசு, பணத்திற்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் 1 ரூபாய் நாணயத்தின் மதிப்பு என்னவோ 1 ரூபாய் தான். ஆனால் இந்த நாணயத்தை தயாரிப்பதற்கு அரசு செலவழிக்கும் தொகை அந்த நாணயத்தின் மதிப்பை விட அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா? 2018-ஆம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வெளியான தகவல்களின்படி 1 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கு 1 ரூபாய் 11 பைசா செலவிடப்படுகிறது. அதாவது அந்த நாணயத்தின் மதிப்பை விட 11 பைசா அதிகம்.

1 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கான உலோக செலவு, போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி ஆகியவற்றையெல்லாம் வைத்து தான் தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல 2 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கான செலவு ரூ.1.28, 5 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கான செலவு ரூ.3.69 மற்றும் 10 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கான செலவு ரூ.5.54.

500 ரூபாய விட 1 ரூபாய் தான் காஸ்ட்லி.. எப்படி தெரியுமா..? காசு, பணத்திற்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?

ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதற்கான செலவு: 10 ரூபாய் நோட்டை தயாரிக்க 96 பைசா செலவாகிறது. 50 ரூபாய் நோட்டுக்கு ரூ.1.11, 100 ரூபாய் நோட்டுக்கு ரூ.1.77, 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.2.29 செலவாகிறது. 1 ரூபாய் காயினுக்கு 1.11 ரூபாய் செலவாகையில் 500 ரூபாய் நோட்டுக்கு வெறும் 2.29 காசுகள் மட்டுமே செலவாகிறது. அப்படி பார்த்தால் 500 ரூபாயை காட்டிலும் 1 ரூபாய் தான் காஸ்ட்லி என்று சொல்லலாம்.

1 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கு ஆகும் செலவும், 50 ரூபாய் நோட்டு தயாரிப்பதற்கான செலவும் கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது. இருந்தும் அரசு 1 ரூபாய் நாணயம் தயாரிப்பதை நிறுத்தவில்லை.

செலவு கூடுதலாக இருந்தும் அரசு ஏன் இன்னும் 1 ரூபாய் நாணயத்தை அச்சிடுகிறது தெரியுமா?: 1 ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கான செலவு அதன் மதிப்பை காட்டிலும் 11 பைசா அதிகமாக இருந்தாலும் அரசு இன்னும் 1 ரூபாய் காயின் தயாரிப்பதை நிறுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் அன்றாட பணப்பரிவர்த்தனைகளில் சேஞ்ச் கொடுக்க 1 ரூபாய் நாணயங்கள் அதிகம் பயன்படுகிறது.

அதேபோல காகித நோட்டுகள் எளிதில் சேதம் அடைந்துவிடும். ஆனால் 11 பைசா அதிகம் செலவிட்டாலும் 1 ரூபாய் நாணயங்கள் நீண்ட காலத்திற்கு எந்த சேதமும் அடையாமல் புழக்கத்தில் இருக்கும். எனவே நாணயத்தை தயாரிப்பதற்கான செலவு அதிகம் இருக்கிறதே என்பதற்காக அதை அரசால் நிறுத்த முடியாது. ஒட்டுமொத்த பொருளாதார தேவை என்ன? பொதுமக்களின் அவசியம் என்ன? என்பதை கருத்தில் கொண்டு அரசு நாணயங்களை அச்சிடுகிறது.

ஒரு ரூபாய் நாணயங்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?: செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அரசுக்கு சொந்தமான சுமார் நான்கு நாணய தயாரிப்பு ஆலைகளை இயக்கி வருகிறது. இந்த ஆலைகள் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் நோய்டாவில் அமைந்துள்ளன. இங்குள்ள ஆலைகளில் தான் நாம் அன்றாட பயன்படுத்தும் நாணயங்கள் அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+