இந்தியா முழுவதும் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்க எண்ணி தொடங்கப்பட்ட திட்டம் தான் "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" (PMMY). இந்தத் திட்டத்தின் மூலம் பல ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்படுகிறது. அரசின் ஆதரவோடு எவ்வளவு தொகை பயன்படுத்துகிறீர்களோ? அதற்கு ஏற்ப முத்ரா கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டம் தற்போது பரவலாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்ரா கடன்களை வழங்குவதற்கான தகுதி மற்றும் அளவுகோல்களை கடுமையாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலியான விண்ணப்பங்களை வைத்து பெறப்படும் கடன்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்ரா கடன்களுக்கான தகுதி: நிதி ஆயோக் முத்ரா கடன்களுக்கான கண்டிப்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. திட்டமிடப்பட்ட மாற்றங்களில் முக்கிய அம்சமாக, தகுதியானவர்கள் மட்டுமே இந்த முத்ரா கடன்களைப் பெறும் வகையில் விரிவான பின்னணி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கையின் மூலம் முத்ரா கடனின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட இருக்கிறது. இதனால் போலியான ஆதரங்களை வைத்து முத்ரா கடன்களைப் பெறுவது வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக்கின் பரிந்துரைகள்: "இம்பேக்ட் அசெஸ்மென்ட் ஆஃப் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தனது சமீபத்திய அறிக்கையில், கடன் மதிப்பீட்டிற்கு டிஜிட்டல் கேஒய்சி (e-KYC) செயல்முறையை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது.
இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறை கடன் பெறுபவரின் தகுதியை மதிப்பிடுவதை எளிதாக்கி, திட்டத்தின் நன்மைகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும். டிஜிட்டல் கேஒய்சி செயல்முறைக்கு மாறுவது கடன் விண்ணப்ப செயல்முறையை சற்று சிக்கலாக்கும் என்றாலும், பாதுகாப்பான மற்றும் சரியான நபர்களுக்கு கடன் சென்றடைய வழிவகை செய்யும்.
முத்ரா கடன் என்றால் என்ன?: முத்ரா கடன் திட்டம் என்பது சாமானிய மக்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சிறு வணிகங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த முத்ரா கடன்கள்.
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது. 3 பிரிவுகளின் படி சிஷு, கிஷோர், தருண் என 3 வகைகளாகப் பிரித்து கடன் வழங்கப்படுகிறது. சிஷு திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ. 5,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற முடியும். அதேபோல தருண் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முத்ரா கடனின் அதிகபட்ச கடன் வரம்பை 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியது. இந்த வரம்பு எல்லா விண்ணப்பதாரர்களுக்கும் கிடையாது. ஏற்கனவே தருண் பிரிவின் கீழ் 10 லட்ச ரூபாய் கடன் பெற்று அதை சரியான முறையில் திருப்பி செலுத்தி இருந்தால் மீண்டும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
முத்ரா திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டதிலிருந்து சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கிட்டத்தட்ட 40 கோடி கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.18.39 லட்சம் கோடி. இவ்வளவு வெற்றிகரமாக இத்திட்டம் செயல்பட்டபோதிலும், கடன் தவறாமல் செலுத்தும் விண்ணப்பதாரர்கள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. எனவே இந்தக் கண்டிப்பான விதிகள், தவறான கடன் பெறுநர்களை சிறப்பாக மதிப்பிட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications