கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வங்கி சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக ஒரு நபர் டெபாசிட் கணக்குகளை வைத்திருந்தால் அவருக்கு நாமினியாக 4 நபர்களை நியமிப்பதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு அதிகரித்து வரும் உரிமைகோரப்படாத டெபாசிட் தொகை பிரச்சனையை சமாளிப்பதையும் வாடிக்கையாளர் சிரமங்களைத் தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.
நம் நாட்டில் அனைத்து வங்கிகளையும் சேர்த்து உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை 2024-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி 78,000 கோடி ரூபாயாக உள்ளது. டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டாலோ அல்லது பிற காரணங்களாலோ பணத்தை எடுக்க முடியாமல் அவருடைய குடும்பத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு தற்போது வங்கி சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கு ஒரு நாமினியை மட்டுமே அனுமதிக்கின்றன. இது உயர்த்தப்பட உள்ளது. அதே நேரத்தில், காப்பீடு மற்றும் HUF கணக்குகளிலிருந்து பணத்தை எடுப்பதிலும் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) அதிகமான நாமினிகள் இருக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டாலும், இந்த விதிகளின் விவரங்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் மசோதையை தாக்கல் செய்த பிறகே தெளிவாகத் தெரியவரும். அரசும் அதிகாரிகளும் இந்த திட்டம் குறித்து மவுனம் காத்தனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல மாதங்களுக்கு முன்பு கோரப்படாத டெபாசிட்கள் மற்றும் நிதிகளை ஒரு கவலையாகக் அடிக்கோடிட்டு கூறினார். சில வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து விட்டு சில நாட்களில் முதலீடு செய்த நபர்கள் இறந்துவிட்டால், அந்த நிதிகள் கோரப்படாமல் அப்படியே வங்கியில் இருந்து உள்ளது. மார்ச் மாத நிலவரப்படி 78,000 கோடி கோரப்படாத தொகை உள்ளது.
என்னதான் வங்கி சட்ட திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டாலும், டெபாசிட் செய்யும் நபர் தங்களுடைய டெபாசிட் குறித்த விவரங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை செய்தாலே கோரப்படாத தொகையின் அளவு வெகுவாக குறையும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications