வெலவெலக்க வைக்கும் வெங்காய விலை.. விலையை சீரமைக்க அரசின் புதிய திட்டம்!

சில நாட்களாக வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விலையை சீராக பராமரிக்க சில்லறை சந்தைகளில் அதிக அளவிலான ஸ்டாக்குகளை இறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்க தரவுகளின் படி வெங்காயத்தின் சில்லறை விலை டெல்லியில் கிலோ ஒன்றுக்கு 67 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களில் மார்க்கெட்கள் மூடப்பட்டது மற்றும் பண்டிகை கால விற்பனை போன்றவற்றின் காரணமாக சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்கும் பொருட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

சோனிபட்டில் உள்ள குளிர்பதனக்கிடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் வெங்காயத்தை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு & காஷ்மீர், டெல்லி போன்ற பகுதிகளுக்கு இறக்குமதி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. வெங்காய விலையை சீராக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெலவெலக்க வைக்கும் வெங்காய விலை.. விலையை சீரமைக்க அரசின் புதிய திட்டம்!

இந்த ஆண்டு விலையை சீராக பராமரிக்கவும் தட்டுப்பாட்டை குறைக்கவும் 4,7 லட்சம் டன் வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் சில்லறை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு வெங்காய வரத்து குறைவு மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை ஏற்பட்டு வெங்காய விலை அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விளையும் வெங்காயத்தின் தரமும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டதும் இந்த விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

இந்தியர்களின் உணவில் சேர்க்கப்படும் முக்கிய காய்கறிகளில் வெங்காயமும் உண்டு ஒன்று சட்னி செய்வது முதல் குழம்பு வைப்பது வரை பல்வேறு உணவுகளிலும் வெங்காயம் முக்கிய பொருளாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான க்ரிசிலின் ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கையில் வெஜ் மீல்ஸ் விலை வெகுவாக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு மிக முக்கிய காரணம் காய்கறிகளின் விலை ஏற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்த விலையேற்றம் உணவுப் பொருள் பண வீக்கத்தை அதிகரித்துள்ளது.

வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி, கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட 2.85 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி 3.85 லட்சம் ஹெட்டேருக்கு அதிகரிக்கப்பட்டது. சுமார் 34 சதவீதம் அதிகம் பயிரிடப்பட்டிருந்தாலும், மழையின் காரணமாக இந்த அதிகரிப்பும் பலன் தரவில்லை.

வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலும் தக்காளியின் சில்லறை விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அசாத்பூர் மண்டியில் சராசரி தக்காளி விலை 27 சதவிதம் குறைந்து குவிண்டால் ஒன்று ரூ. 4000 ரூபாய்க்கு விற்பனையானது. பிம்பால்கானில் தக்காளியின் சராசரி விலை 35 சதவீதம் குறைந்து குவிண்டால் ஒன்று 2650 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் உருளைக்கிழங்கின் விலை கடந்த 3 மாதங்களாக 37 என்ற விலையில் நிலையாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+