உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் தான் (பிஎல்ஐ திட்டம்). இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் உற்பத்தியினை அதிகரிக்கவும், இறக்குமதியினை குறைத்து ஏற்றுமதியினை அதிகரிக்கவும், இதன் மூலம் வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் எனலாம்.
அரசு எதிர்பார்த்ததை போல பல துறைகளில் வெற்றிபெற ஆரம்பித்துள்ள இந்த திட்டத்தினால், அன்னிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் எனவும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா பெரிதும் பயனடையும் என்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மிகப்பெரிய கனவாக உள்ளது.
ஐடி துறைக்கு நல்ல காலம்
தற்போது இந்த பிஎல்ஐ திட்டத்தில் பார்மா துறை, தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்கள், உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ், ஜவுளித் துறை, ட்ரோன் என பற்பல துறைகள் பலன் பெற்று வருகின்றன. இதற்கிடையில் அரசின் இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் ஐடி துறையும் பலன் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎல்ஐ மூலம் ஊக்குவிப்பு
பிஎல்ஐ திட்டத்தின் மூலம் ஐடி துறையினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக ஐடி ஹார்டுவேர் உற்பத்தி மற்றும் மின் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் என பலவும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வரப்பிரசாதம்
பிஎல்ஐ திட்டம் மூலம் ஐடி துறை சார்ந்த அசல் உற்பத்தியாளர்கள் இதன் மூலம் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க டிஜிட்டல் வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், ஐடி சார்ந்த பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஆக இது ஐடி துறையினருக்கு இது ஒரு உற்சாகமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் அரசின் இந்த ஊக்குவிப்பு சலுகைகள் ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கும்.
ஐடி துறையின் பங்கு
இந்தியாவில் இன்றும் பெரியளவில் வேலை வாய்ப்பினை கொடுக்கும் ஐடி துறையானது, தொடர்ந்து வளர்ச்சிக்கான பாதையில் சென்று கொண்டுள்ளது. தற்போது உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சற்றே பின்னடைவு இருந்தாலும், அடுத்து வரும் காலாண்டுகளில் இந்த நிலை சீரடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
3 ட்ரில்லியன் டாலர் மதிப்புடைய உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் துறையில், இந்தியா தனது பங்கீட்டினை அதிகரிக்கும் விதமாக கவனம் செலுத்தி வருகின்றது. ஆக அந்த வகையில் ஏற்கனவே பி எல் ஐ திட்டம் மூலம் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டு வரும் நிலையில், ஐடி துறையிலும் அரசின் கவனம் விரைவில் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியினை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளது.
உற்பத்தி & ஏற்றுமதி இலக்கு
ஏற்கனவே செமிகண்டக்டர் துறைக்கு பிஎல்ஐ திட்டத்தின் மூலம் 10 பில்லியன் டாலர் ஊக்கத் தொகையினை அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மின்சாதன ஹார்டுவேர் உற்பத்தியினை 300 பில்லியன் டாலர் மதிப்பிலும், 120 பில்லியன் டாலர் மதிப்பிலும் ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்துள்ளது.
முக்கிய பங்கு
மொத்தத்தில் ஐடி ஹார்டுவேர் துறையில் இந்தியாவின் பங்கு என்பது இனி வரும் காலத்தில் அதிகரிக்க இது வழிவகுக்கலாம். இது இந்தியாவினை சர்வதேச நாடுகளின் சந்தையில் இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் உதவும் எனலாம். இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications