பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. எதிர்வரும் பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டு உள்ளனர். இந்நிலையில், பிரபல சந்தை நிபுணர் சுனில் சுப்பிரமணியம், அடிதட்டு மக்களின் நுகர்வை அதிகரிக்கும் வகையில்தான் பட்ஜெட் இருக்கும் என்ற தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: வரி விதிப்புக்குள் வராத பொருளாதார ஏணியின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும். எனவே இந்த பிரிவினருக்கு நிதி உதவி வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும்.
வரிகளை பொறுத்தவரை, சொல்லும்படியான மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்த முறை பட்ஜெட்டின் பேலன்ஸ் முக்கியமானது என்பதால் இது ஒரு முக்கியமான பட்ஜெட் என்று நான் நினைக்கிறேன். அரசாங்கம் வருவாய் செலவு மற்றும் நுகர்வுக்கு தனது முயற்சிகளை அர்ப்பணிக்க வேண்டும். அந்த முயற்சிகள் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்களை சென்றடையவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அரசாங்கம் செய்யும் எந்தவொரு வளர்ச்சி மூலதனமும் சமானிய மக்களின் கைகளில் பணத்தை பெறுவதை நோக்கியே இருக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவாக இருந்தது, ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது மற்றும் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல்கள் வர உள்ளது. ஆகையால் மூலதன செலவினத்துக்கு வருவாய்க்கும் இடையில் செலவினங்களை ஒதுக்குவது மத்திய அரசின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இருக்கும். எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு, நுகர்வு பக்கத்திற்கு மறுஒதுக்கீடு என்று நான் எதிர்பார்க்கிறேன். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நிறுவன முதலீட்டாளர்கள் நிச்சயமாக சாதகமாக பார்ப்பார்கள்.
நுகர்வு அதிகரித்தால் மட்டுமே தனியார் துறை மூலதனம் அதிகரிக்கும். ஏனெனில் இந்திய பொருளாதாரத்தின் பிரச்சினை அரசாங்கத்தின் செலவினம் அல்ல. அரசாங்கம் பல ஆண்டுகளாக மூலதன செலவினத்துக்கு நிறைய செலவு செய்கிறது. ஆனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7-8 சதவீதத்தை தாண்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் தனியார் துறை மூலதன செலவினம் நடக்காததுதான்.
வெகுஜனங்களின் நுகர்வு திறன் பயன்பாட்டை அதிகரிக்காததை இதற்கு காரணம். எனவே எதிர்வரும் பட்ஜெட் வெகுஜன சந்தை நுகர்வை தூண்டுமானால் சந்தை அதை உன்னிப்பாக கவனிக்கும். நிதியமைச்சர் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார் அல்லது பணத்தை செலவிட எப்படி திட்டமிடுகிறார் என்பதை பொறுத்து இது ஒரு முக்கியமான பட்ஜெட் என்று நான் கூறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications