IT ஊழியர்களுக்கு மீண்டும் இந்த சலுகை நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!

ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமெடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும் அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் ஏப்ரல் 30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. கொரோனாவால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள நிறுவனங்கள், தேவை குறைவால் பணி நீக்கம் சம்பள குறைப்பு, புதிய பணியமர்த்தல் முடக்கம், ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை முடக்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் வீட்டில் இருந்து ஜூலை 30 வரை பணி புரிய சொல்லியிருப்பது இன்னும் பிரச்சனையை அதிகரிக்கலாம். ஆனால் மக்களின் நலனோடு ஒப்பிடும்போது இதெல்லாம் பெரிதில்லை.

அவகாசம் நீட்டிப்பு

அவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவில் வேகம் குறைந்ததாக தெரியவில்லை. இதனையடுத்து இந்த நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கர்நாடக அரசும் ஜூலை 31 வரை ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஐடி நிறுவனங்கள் அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

வீட்டில் இருந்து பணி

வீட்டில் இருந்து பணி

நாட்டில் மிக வேகமாக கொரோனாவின் காரணமாக ஐடி ஊழியர்களில் 90% பேரும், இதே பிபிஓ மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் உள்ள ஊழியர்களில் 70 -80% பேரும் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ன மாற்றம்?

என்ன மாற்றம்?

கர்நாடகாவின் முதன்மை மற்றும் இடை நிலைக் கல்வி அமைச்சர் எஸ் சுரேஷ்குமார் செவ்வாய்கிழமையன்று, சிவப்பு மற்றும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் செயல்படக்கூடிய வணிகங்கள் குறித்த கூடுதல் தெளிவை வழங்கும் என்றும் கூறினார். குறிப்பாக சிவப்பு மண்டலங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு ஊழியர்களுக்கு அனுமதி

பெங்களூரு ஊழியர்களுக்கு அனுமதி

குறிப்பாக பெங்களுரூ, பெலகாவி, மைசூரு, விஜயபுரா, பாகல்கோட், கலாபுராகி, பிதர் மற்றும் தட்சிணா கன்னடா உள்ளிட்ட நகரங்களை பட்டியலிட்டுள்ளார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஐடி நிறுவனங்களில் பெங்களூருவில் தான் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் லாக்டவுன் காரணமாக வீட்டிலிருந்து வேலைகளை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+