டெல்லி: இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்கும் தூரம் வரையிலான கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும், தற்போதுள்ள நடைமுறைப்படி முழுமையான சாலைக்கான கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் குத்தகை பெற்ற நிறுவனங்கள் அதற்காக வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணங்களை வசூலிக்கின்றன. தற்போது இந்தியாவில் சுங்க கட்டண வசூல் முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. உதாரணமாக குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Global Navigation Satellite System (GNSS)) அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செயற்கைக்கோள் வாயிலாக பயண தூரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக 2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
சுங்க கட்டண வசூல் முறை செயற்கைக்கோள் அடிப்படையான குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் எனப்படும் ஜிஎன்எஸ்எஸ் முறை நடைமுறைக்கு வர இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி வாகனங்களில் செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன் போர்ட் யூனிட் (On-Board Units)எனப்படும் ஓபியூ என்ற கருவி பொருத்தப்படும்.
இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம் சுங்க கட்டண சாலைகளில் பயணிக்கும் போது முதல் 20 கிலோமீட்டருக்கு பிறகு அந்த வாகனம் பயணிக்கும் தூரம் செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு ஃபாஸ்ட் டேகை போலவே வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வாகனங்களில் இந்த ஜிஎன்எஸ்எஸ் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்ட விடும் என அரசு தெரிவித்துள்ளது. அதுவரை ஃபாஸ்டாக் நடைமுறையோடு ஜிஎன்எஸ்எஸ் முறையிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதாவது இரண்டும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. கூடிய விரைவில் சுங்கச்சாவடிகளில் ஜிஎன்எஸ்எஸ் ஆன்போர்ட் யூனிட்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கென தனி பாதைகள் கட்டமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை முழுமையாக அமலுக்கு வரும்போது சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய நேரம் 714 நொடிகளில் இருந்து 47 நொடிகளாக குறைந்த விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது என்பன போன்றவை தவிர்க்கப்படும் என அரசு கூறுகிறது.
அது மட்டும் இன்றி சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதால் வாகன ஓட்டிகளுக்கும் இதில் பெருமளவிலான தொகை மிச்சமாகும் என அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் இந்த நடைமுறைக்கு மாற வேண்டும் என்பதற்காக அரசு, ஜிஎன்எஸ்எஸ் கொண்ட தனியார் வாகன உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் 20 கிலோமீட்டர் வரை எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என கூறியுள்ளது. நேஷனல் பர்மிட் வாகனத்தை விட தவிர்த்து ஒரு வாகன ஓட்டுநர், உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள், ரிங் ரோடு அல்லது சுரங்க பாதை உள்ளிட்ட எந்த ஒரு பகுதியையும் பயன்படுத்துகிறார் என்றால் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறையின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையிலும் 20 கிலோ மீட்டர் வரை அவர்கள் இலவசமாக எந்த கட்டணமும் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 20 கிலோமீட்டருக்கு மேல் அவர்கள் பயணிக்கும் தூரம் சேட்டிலைட் மூலம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications