இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 95 முதல் 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எண்ணெய் தற்போது 150 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
சாமானிய மக்கள்
இதனால் சாமானிய மக்களின் குடும்பச் செலவுகளில் இருந்து, ஹோட்டலில் சாப்பிடும் பேச்சுலர்கள் வரையில் அனைவரும் கடுமையாகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
அடிப்படை புரிந்துகொள்ள வேண்டும்
இந்தியாவில் ஏன் இந்த நிலை என்பதைப் புரிந்துகொள்ள முதலில் அதன் அடிப்படை பிரச்சனையைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு என்ன நிலையோ அதே நிலை தான் பாமாயில்-க்கும்.
சமையல் எண்ணெய் தேவை
ஆம், இந்திய மக்களுக்கான சமையல் எண்ணெய் தேவையைப் பெரும் பகுதி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதன் மூலமாகவே தீர்க்கப்படும் காரணத்தால் சர்வதேச சந்தையில் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ அல்லது விலை அதிகரித்தாலோ இந்திய சந்தையில் இது நேரடியாகப் பாதிக்கும்.
11,400 கோடி ரூபாய் திட்டம்
அந்த வகையில் தான் தற்போது உற்பத்தி குறைந்து டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்கவே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிதாக 11,400 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விலை கட்டுப்படுத்தல்
இத்திட்டம் மூலம் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெரிய அளவில் உற்பத்தி செய்து விலையைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.
தேசிய சமையல் எண்ணெய் - பாமாயில் திட்டம்
இன்று நாடாளுமன்றத்தில் தேசிய அளவிலான சமையல் எண்ணெய் - பாமாயில் திட்டத்திற்கு (National Mission on edible oils-oil palm (NMEO-OP)) ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. சுமார் 11,400 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் சமையல் எண்ணெய் அளவீட்டைக் குறைப்பது மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையை நம்பியிருக்கும் நிலையும் குறையும் என நம்பப்படுகிறது. இப்படி இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது..?
அனுராக் தாக்கூர் விளக்கம்
நாடாளுமன்ற கூட்டம் முடிந்த பின்பு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள தேசிய அளவிலான சமையல் எண்ணெய் - பாமாயில் திட்டம் மூலம் வடகிழக்கு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் எண்ணெய் விதைகளை உற்பத்தி செய்யும் புதிய தோட்டங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் இந்தியாவிலேயே பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
பாமாயில் உற்பத்தி அதிகரிப்பு
இந்தத் திட்டம் மூலம் இப்பகுதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டும் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இதேநேரத்தில் வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தை மெல்ல மெல்லக் குறைக்க முடியும் என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
சீனாஅரிசி இறக்குமதி
சமீபத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணத்தால் இந்தியாவில் இருந்து தான் கடந்த 10 மாதமாகச் சீனா அரசியை இறக்குமதி செய்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications