மத்திய அரசு வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒரே ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்காக HR இடம் இருந்து வந்த எச்சரிக்கை மின்னஞ்சலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு நாள் விடுப்புக்கே விளக்கம் கேட்டு வங்கி நிர்வாகம் அனுப்பிய இந்த மின்னஞ்சல், அரசுப் பணிகளில் இருக்கும் கடுமையான விடுமுறை கொள்கைகளையும், பணி அழுத்தத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
'மத்திய அரசு வங்கிகளில் வேலை-வாழ்க்கை சமநிலை இல்லை' என்ற தலைப்பில், அந்த ஊழியர் சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் பதிவிட்டிருந்தார். "நான் உடல்நிலை சரியில்லாததால் ஒரே ஒரு நாள் விடுப்பு எடுத்தேன். அதற்கு அடுத்த நாளே எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. மத்திய அரசு வேலை நல்ல தேர்வு என்று நினைப்பவர்கள் மீண்டும் யோசியுங்கள்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில், "முன் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்ததற்கான விளக்கம்" என்ற தலைப்பில் வந்த மின்னஞ்சலில், ஊழியரின் இச்செயல் "அலுவலகப் பொறுப்புகளில் அலட்சியத்தையும், நிர்வாக ஒழுக்கத்தில் அக்கறையின்மையையும் பிரதிபலிக்கிறது" என்று HR துறை கடுமையான தொனியில் குறிப்பிட்டிருந்தது. மேலும், மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அது திருப்திகரமான விளக்கம் அளிக்காததாக கருதப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஊழியருக்கு அதிர்ச்சி கொடுத்த HR : அதாவது, அந்த கடிதத்தில், "நீங்கள் 06.09.2025 அன்று முன் அனுமதி பெறாமலோ அல்லது இந்த அலுவலகத்திற்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமலோ விடுப்பில் சென்றது மண்டல அலுவலகத்தின் (Circle Office) கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய செயல், உத்தியோகபூர்வ பொறுப்புகளில் அலட்சியத்தையும் நிர்வாக ஒழுக்கத்தை புறக்கணிப்பதையும் பிரதிபலிப்பதால், இது மிகவும் தீவிரமாக கருதப்படுகிறது.
இந்த தகவல் தொடர்பின் தேதியில் இருந்து 3 நாட்களுக்குள், நீங்கள் முன் அனுமதி இல்லாமல் விடுப்பில் சென்றதற்கான காரணங்களை குறிப்பிட்டு ஒரு எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்க தவறினால், திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கருதப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளது.
இந்த மின்னஞ்சல், அரசு வங்கி ஊழியர்கள் மத்தியில் நிலவும் கடுமையான விடுமுறை கொள்கைகள் மற்றும் பணிச் சுமை குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. இதற்கிடையே, இதே வாரம் மற்றொரு அரசு வங்கி ஊழியர், வேலையில் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக பணியை விட்டு விலகியதாக பதிவிட்டிருந்ததும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணி என்ற கவர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் இதுபோன்ற அழுத்தமான பணிச்சூழல் குறித்த கவலைகளை இந்த சம்பவங்கள் எழுப்பியுள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications