இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தக மாற்றங்கள் பல துறை சார்ந்த பல கோடி நிறுவனங்கள் பெரிய அளவிலான நிதி நெருக்கடியிலும், வருவாய் சரிவையும் சந்தித்தது. இந்த மோசமான காலகட்டத்தில் இந்திய வங்கிகளில் மத்தியில் பெரிய அளவிலான வர்த்தகப் போராட்டமே நடந்துள்ளது.
ஆம் இந்த இக்கட்டான காலகட்டத்தில், ரீடைல் கடன் பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைத் தனியார் வங்கிகள் கைப்பற்றிய நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து உள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகளின் வர்த்தக ஆதிக்கத்திலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை மாறப் பொதுத்துறை வங்கிகள் பண்டிகை காலத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள்
பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ரீடைல் கடன் பிரிவில் தனியார் வங்கிகள் அதிகளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்றிய நிலையில், மீண்டும் வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டத்துடன் இந்தியன் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற வங்கிகள் அதிக அளவிலான வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகக் கார் மற்றும் ஹோம் லோன் பிரிவு கடன்களுக்கு வட்டி அதிகளவில் குறைபட்டும், processing கட்டணத்தில் சில தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளது.
ஆனால் இக்காலகட்டத்தில் பொதுத்துறை வங்கியில் தங்கக் கடன் பிரிவில் அதிகளவிலான வர்த்தகம் குவிந்துள்ளது.
வர்த்தகச் சந்தை
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட்டுத் தற்போது மெல்ல மெல்ல வர்த்தக சந்தையும், பொருளாதாரம் மீட்சி அடைந்து வரும் இந்தச் சூழ்நிலையில் பருவமழை, அறுவடைக் காலத்தில் கிராமப் புற வர்த்தகச் சந்தை மேம்படும் சமயத்தில் பொதுத்துறை வங்கிகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை காலம்
லாக்டவுன் தளர்வு அளிக்கப்பட்ட காலத்தில் இருந்து பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் ரீடைல் பிரிவில் தொடர் வர்த்தக உயர்வைச் சந்தித்து வருகிறது. ஆனால் உண்மையான வர்த்தக உயர்வையும், அதிகளவிலான வர்த்தகத்தையும் தீபாவளி, நவராத்திரி பண்டிகை காலத்தில் தான் சிறப்பாக இருக்கும்.
எனவே பொதுத்துறை வங்கிகள் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை ஈர்க்க பெரிய அளவிலான திட்டத்தைத் தீட்டி வருகிறது எனப் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
தள்ளுபடி
பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலத்தில் கார், பைக், வீடு, தங்கம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்து விற்பனை பிரிவிலும் தள்ளுபடி அறிவிக்கப்படும். எனவே இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
இதனை மையமாக வைத்துத் தான் பொதுத்துறை வங்கிகள் இக்காலகட்டத்தை முக்கிய இலக்காக வைத்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications