டெல்லி: இந்தியாவில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சைபர் குற்றங்களில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட செல்போன்களை பிளாக் செய்யுமாறு மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆணையிட்டுள்ளது. அதேபோல சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ள 20 லட்சம் சிம் கார்டுகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து சைபர் குற்றங்கள் மற்றும் நிதி சார்ந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வந்துள்ளனர்.
அந்த வகையில் சைபர் குற்றங்கள் மற்றும் முறைகேடான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 28,200 செல்போன்களை பிளாக் செய்யுமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுளனர்.
கூடுதலாக இவற்றுடன் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 20 லட்சம் செல்போன் எண்களை ரீ -வெரிஃபிகேஷன் அதாவது மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் என்றும், இவ்வாறு முறையாக வெரிஃபிகேஷன் செய்யப்படவில்லை என்றால் அவற்றின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவின் சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தியாவில் அண்மை காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன . சைபர் குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, அதே போல விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய சைபர் க்ரைம் ரிப்போர்ட்டிங் தளத்தை கொண்டு வந்தது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு நிகழ்ந்த சைபர் குற்றங்களை நேரடியாக இந்த இணையதளத்தில் சென்று புகார் கூறலாம். இதில் வரக்கூடிய புகார்களின் அடிப்படையில் தான் தற்போது மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அரசின் இந்த முயற்சி சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஈடுபடுபவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள முன்னாள் தேசிய சைபர் பாதுகாப்பு ஆலோசகரான ராஜேஷ் பன்ட், சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடிய வகையில் சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
story written by: Devika


Click it and Unblock the Notifications