2020ல் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அதிகமானோர் வர்த்தகத்தையும் வேலைவாய்ப்புகளையும் இழந்த காரணத்தால் மத்திய அரசு 6 மாத வட்டி சலுகை அளித்தது.
இந்த 6 மாத வட்டி சலுகை குறித்துச் சுப்ரீம் கோர்ட்-ல் தொடுக்கப்பட்ட வழக்கில் கடன் சலுகை பெற்ற கடனுக்கான கூட்டு வட்டியும் (Compound Interest) தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு 1,800 முதல் 2000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் பாதிப்பு அடைந்துள்ளது.

இதன் வாயிலாக 2020-21ஆம் ஆண்டில் 6 மாத காலத்திற்குக் கடன் வாங்கிய அனைவருக்கும் கூட்டு வட்டி சலுகை அளிக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வங்கி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி முதல் 3 மாத கடன் சலுகையின் போது கடன் வாங்கியவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் கடன் சலுகை பெற்றனர், இது 6 மாத முடிவில் 40 சதவீதமாகக் குறைந்தது. இதுவே கார்ப்பரேட் கடனில் பிரிவில் 25 சதவீத கடனாளர்கள் 6 மாத சலுகை பெற்றனர்.

ரிசர்வ் வங்கி மார்ச் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 1 முதல் மே 31, 2020 வரையில் 3 மாத கடன் சலுகை அளித்தது. ஆனால் கொரோனா தொற்றுக் குறையாமல் தொடர்ந்து அதிகளவிலான பாதிப்பை உருவாக்கிய காரணத்தால் இந்தக் கடன் சலுகை ஆகஸ்ட் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது.
இந்த 6 மாத கடன் சலுகை அளிக்கப்படுவதில் வங்கிகள் மத்தியில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் வாயிலாகச் சுப்ரீம் கோர்ட் கடன் சலுகை பெற்றவர்கள் 6 மாதத்திற்கு முழுமையாகச் சலுகை எவ்விதமான கூட்டு வட்டியும் இல்லாமல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications