இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. சர்வதேச சந்தை விலை உயர்வால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெரியளவில் உயர்ந்த நிலையில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் தற்போது விலை குறைந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ரீடைல் பிராண்டட் எண்ணெய் நிறுவனங்களும் புதிய எண்ணெய் இருப்புக்கு விலையைக் குறைத்துள்ளது என மத்திய அரசின் உணவு துறை செயலாளர் சுதான்சு பாண்டே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மத்திய அரசு மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இடைத் தேர்தல் முடிவுகள்
மத்திய அரசு பெட்ரோல், டீசலை போல் சமையல் எண்ணெய் மீதும் அதிகப்படியான வரியை விதித்து வரி வருமானம் பெற்று வந்த நிலையில் நாட்டு மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 3 மாநில இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது போல் தற்போது சமையல் எண்ணெய் மீதான வரியையும் குறைத்துள்ளது.
சமையல் எண்ணெய்
மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் மீது இருந்த 2.5 சதவீத வரியை 0 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதேபோல் சமையல் எண்ணெய் மீது இருந்து அக்ரி செஸ் 20 சதவீதத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத பாமாயில்-க்கு 7.56 சதவீதமும், சோயாபீன் மற்றும் சன்பிளவர் ஆயில்-க்கு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
வரிக் குறைப்பு
இதன் தற்போது சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீது மொத்தமாகவே 7.5 சதவீத வரி மட்டுமே உள்ளது, இதேபோல் சுத்திகரிக்கப்படாத சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் மீது 5 சதவீத வரி மட்டுமே உள்ளது. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் மீதான வரித் தற்போது இருக்கும் 32.5 சதவீத வரியை 17.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
விலை சரிவு
இந்த வரி குறைப்புக்கு முன்பு அனைத்து சமையல் எண்ணெய் மீதான செஸ் வரி 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சமையல் எண்ணெய் விற்பனையில் முக்கிய நிறுவனங்களாக இருக்கும் அதானி வில்மார் மற்றும் ருச்சி இணடஸ்ட்ரீல் ஆகியவை மொத்த விலை விற்பனையில் லிட்டருக்கு 4 முதல் 7 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
20 ரூபாய் வரை குறையும்
அடுத்தச் சில நாட்களில் பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் போன்ற சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரையில் குறையும் நிலை உருவாகும், அடிப்படை வரியும் குறைக்கப்பட்டது, அதேபோல் செஸ் வரியும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications