கொரோனாவால் பலத்த அடி வாங்க காத்திருக்கும் இந்தியா.. ஒப்புக் கொண்ட அரசு..!

டெல்லி: கடந்த வெள்ளிக்கிழமையன்று தான் 7 வருடத்தில் இல்லாதளவுக்கு டிசம்பர் காலாண்டு ஜிடிபி விகிதம் குறைந்ததாக செய்திகள் வெளியாகின. இதுவே பெரிய அடிதான் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே பாதாளத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம், மேலும் சீனாவின் மிகக் கொடூரமான தோற்றுவிப்பான கொரோனாவினால் உலக நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படும் நிலையில் இந்திய பொருளாதாரம் என்னவாகுமோ?

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரமும் பெரிதும் வீழ்ச்சி காணலாம் என வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

வளர்ச்சி குறையலாம்

வளர்ச்சி குறையலாம்

இந்த நிலையில் நம் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் மாறாக முடிவடைந்த காலாண்டினை விட மோசமாக மார்ச் காலாண்டில் ஜிடிபி விகிதம் குறையலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்பெல்லாம் மற்ற ஆய்வாளர்கள் மத்தியில் எப்படி கணிப்புகள் இருந்தாலும் அரசு தரப்பில் அப்படி எல்லாம் இல்லை, என ஏதேனும் ஒரு பதில் வரும், ஆனால் இந்த முறையோ அரசே கைவிரித்து விட்டது என்று தான் கூறவேண்டும்.

ஜிடிபி கணிப்பு

ஜிடிபி கணிப்பு

ஏனெனில் நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டான மார்ச் காலாண்டில் வளர்ச்சி வெறும் 4.6% ஆக தான் இருக்கும் என்று அரசு கணிப்புகள் கூறுகின்றன. மேலும் நடப்பு நிதியாண்டில் வரவிருக்கும் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் ஜிடிபி விகிதம் முறையே 5.6 மற்றும் 5.1% ஆக இருக்கும் என்றும் அரசு தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியில் அழுத்தம்

வளர்ச்சியில் அழுத்தம்

ஆக மொத்தத்தில் 2019 - 20ம் நிதியாண்டில் மொத்த வளர்ச்சி 5% ஆகத் தான் இருக்கும் என்றும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 4.6% ஆகத் தான் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் நிலவி வரும் பொருளாதார மந்தம் இந்தியாவை பின்னோக்கி தள்ளுகிறது என்றால், கொரோனா இன்னும் கீழ் நோக்கி தள்ளி விடும் போல் இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இவ்வளவு பாதிப்பா?

இவ்வளவு பாதிப்பா?

நடப்பு காலாண்டில் நிலவி வரும் மந்தநிலை, பொருளாதார வீழ்ச்சி, அடுத்த காலாண்டிலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த அவநம்பிக்கையானது கொரோனா வெடிப்பால் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை 2,858 பேருக்கும் மேம் பலி கொண்டுள்ள நிலையில் 83,600 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடரும் தாக்கம்

தொடரும் தாக்கம்

உலக சுகாதார அமைப்பால் கோவிட் 19 என்ற அங்கீகரிக்கப்பட்ட இந்த வைரஸ் தங்கு தடையின்றி உலகம் முழுவதும் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் 50 நாடுகளில் இதன் தாக்கம் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் உலகின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவிலேயே இந்த கொடிய தாக்கத்திற்கு ஒருவர் பலியாகியுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வீழ்ச்சி நிச்சயம்

வீழ்ச்சி நிச்சயம்

மேலும் டிசம்பர் கடைசி வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸினால் நிச்சயம் மார்ச் காலாண்டில் அதன் தாக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த கொடிய கொரோனாவால் உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தியா பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.

உலகின் மொத்த செலவினை அதிகரிக்கலாம்

உலகின் மொத்த செலவினை அதிகரிக்கலாம்

மேலும் இந்த கொடிய வைரஸால் உலகளாவிய பொருளாதாரத்தில் 1.1 டிரில்லியன் டாலர் செலவுகள் அதிகமாகும் என்றும் பகுப்பாய்வு காட்டுகிறது. இது உலகின் மொத்த உற்பத்தி விகிதத்தில் 1.3% ஆகும். மேலும் இந்த கொடிய வைரஸானது மேலும் தொற்று நோயாக மாறினால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 400 பில்லியன் டாலர்களை அழிக்கும் வல்லமை படைத்தது என்றும் கூறியுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு

தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு

இந்த நெருக்கடிக்கும் மத்தியில் சீனாவில் உள்ள தொழிற்சாலைகள் முடக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சில இடங்களில் தொழில் சாலைகள் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது உலகளாவிய விநியோக சங்கிலியை பாதிக்கிறது என்றும் செய்திகள் கூறுகின்றன.

துறை வாரியாக வீழ்ச்சி அதிகரிக்கும்

துறை வாரியாக வீழ்ச்சி அதிகரிக்கும்

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆட்டோமொபைல் துறை, மருந்து துறை, எலக்ட்ரானிக்ஸ் தொழில் மற்றும் பல தொழில்கள் கொரோனா காரணமாக மூலதன பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இதனால் இத்துறைகள் பெரும் சரிவை சந்திக்கக் கூடும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இறக்குமதியை சார்ந்த பல சிறு குறு வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பெரும் தாக்கம்

இந்தியாவில் பெரும் தாக்கம்

கொரோனா வைரஸ் சீனாவில் பல உயிர்பலிகளை எடுத்துக் கொண்டது. என்றாலும் பொருளாதார ரீதியாக இன்னும் பெருத்த அடியினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இது பெருத்த தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆக மார்ச் காலாண்டில் கணித்துள்ள ஜிடிபி விகிதத்தினையாவது எட்டிவிட்டால் பரவாயில்லை என்று தான் கூற வேண்டும்.

போகிற போக்கை பார்த்தால் அதுவே சந்தேகமாகத்தான் உள்ளது. எல்லாம், இந்த கொரோனாவின் மாயம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+