டெல்லி: ஒருபுறம் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் பல தனியார் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
இந்த நிலையில் பொதுத்துறையை சேர்ந்த பல நிறுவனங்கள் மறு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், சில நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்க முடிவெடுத்துள்ளது.
இதில் முதல் இடத்தில் உள்ள நிறுவனம் தான் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தான் முதலிடத்தில் உள்ளது.
தீவிர நடவடிக்கை
பிரபலமான பொதுத்துறையை சேர்ந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய முன்னணி எரிபொருள் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை கடந்த சில மாதங்களாகவே தனியார்மயம் ஆக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் இதன் பங்குகளை விற்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏலத் தேதி பின்னர் அறிவிப்பு
இந்த நிலையில் இதன் முதல் கட்ட நடவடிக்கையாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை மதிப்பிட சொத்து மதிப்பீட்டாளருக்கு அரசு 50 நாட்கள் கெடு விதித்துள்ளது. இந்த மதிப்பீட்டு நடவடிக்கை முடிந்த பின் விரைவில் பாரத் பெட்ரோலியம் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சரவை ஒப்புதல்
நாட்டி கேபினெட் கமிட்டி இந்த தனியார்மயத்திற்கு, கடந்த நவம்பர் 20ம் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும் பாரத் பெட்ரோலியம் உள்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Shipping Corp of India), கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Container Corp of India), டி.ஹெச்.டி.சி இந்தியா அன்ட் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட் ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC India and North Eastern Electric Power Corporation Ltd) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய கேபினட் அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
எவ்வளவு பங்கு விற்பனை?
இதில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Container Corp of India) நிறுவனத்தின் மொத்த பங்கு விகிதம் 54.8 சதவிகிதத்தில், 30.8 சதவிகிதம் பங்கினை அரசு விற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விற்பனையானது இரண்டு முறையில் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஒன்று இந்த நிறுவனத்தினை ஏலத்தில் எடுக்க யார் யாருக்கு விருப்பம் உள்ளது ( expression of interest), இரண்டாவது கட்டத்தில் சாத்தியமான விலைகளை சமர்பிக்குமாறும் கேட்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications