டெல்லி: பிறப்பு சான்றிதழ் என்பது நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பிறந்த உடன் அரசிடம் பதிவு செய்து பிறப்பு சான்றிதழை பெற வேண்டும் . பின்னர் ஆதார் கார்டு எடுப்பதில் தொடங்கி பலவற்றுக்கும் இது ஆவணமாக தேவைப்படும். இதில் தான் மத்திய அரசு தற்போது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
வழக்கமாக குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் முறையில் கூடுதல் தகவல்களை சேர்க்க வேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி பிறப்பு சான்றிதழில் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் மதம் மற்றும் பிற தகவல்கள் இனி தனித்தனியாக பதிவு செய்யப்படும்.

இதுவரை இருந்த விதிமுறையின்படி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குடும்பத்தின் மதம் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதனை மாற்றியுள்ளது. குழந்தை பிறப்பு தொடர்பான முந்தைய பதிவு விண்ணப்ப எண்-1 இல், குடும்பத்தின் மதம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது புதிய விதியின்படி அதில் மேலும் ஒரு வரிசை சேர்க்கப்பட்டுள்ளது. அதில் குழந்தையின் பெற்றோர் தொடர்பான தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் உள்துறை அமைச்சகம் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, மத்திய அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் அரசின் பல்வேறு திட்டங்கள், பல்வேறு அடையாள அட்டைகளுக்கு இந்த தகவல் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோரும் கூட இது போல தனித்தனியாக தங்களின் மதங்களை பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஏற்கனவே உள்ள பிறப்பு சான்றிதழ்களில் திருத்தம் இருக்குமா என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இது தவிர, இப்போது ஒரு நபர் இறந்த பிறகு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில் சமீபத்திய இறப்புக்கான காரணம் மற்றும் பழைய நோய் தொடர்பான தகவல்களையும் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரலான ஆர்ஜிஐ இறப்புச் சான்றிதழில் நாள்பட்ட நோய் தொடர்பான தகவல்களை வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications