டெல்லி: வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என தொழில்துறை கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டை ஒட்டி தொழில்துறையினர் உடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ, வர்த்தக கூட்டமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தலைவரான சஞ்சீவ் பூரி நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து மக்களின் நுகர்வு போக்கு உயரும் என அவர் கூறினார். கட்டுமானம், ரியல் எஸ்டேட் ,சுற்றுலா, மரச்சாமான்கள், காலணி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய துறைகளில் முதலீட்டை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என கேட்டு கொண்டார்.
வர்த்தக கூட்டமைப்பினர், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டங்களை கொண்டு வர வேண்டும், இந்தியாவில் தற்போது தொழில் புரிவதற்கான செலவினங்களை குறைக்க வேண்டும், வரி நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் உள் கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆலோசனைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் , காட்டன் உள்ளிட்ட மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர் . இந்தியாவில் வரி கட்டமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அரசு மூலதன செலவினத்தை அதிகரிக்க வேண்டுமென தொழில்துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு மற்றும் பாசனத்தை மேம்படுத்த அதிக தொகையை செலவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எரிபொருட்களுக்கான வரிகளை குறைப்பது, வருமான வரி விகிதங்களை குறைப்பது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியத்தை அதிகப்படுத்துவது, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான திட்டங்களை மறுசீரமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. டேட்டா சென்டர்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழில்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Story Written By: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications