இனி பிளிப்கார்ட், அமேசான் தேவையில்லை.. வந்தாச்சு அரசு ஈகாமர்ஸ் தளம்..!

இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.

இதனால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ரீடைல் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடுமோ என்ற அச்சம் பொருளாதார வல்லுநர்களுக்கு மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் வந்துள்ளது.

ஈகாமர்ஸ் துறை

ஈகாமர்ஸ் துறை

இந்திய ஈகாமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கிய ஒரு தளம் தான் ONDC, தற்போது இது பெங்களூரில் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு இன்று வந்துள்ளது.

சிறு ரீடைல் விற்பனையாளர்கள்

சிறு ரீடைல் விற்பனையாளர்கள்

Open Network for Digital Commerce என்பதன் சருக்கம் தான் இந்த ONDC, இத்தளத்தின் மூலம் சிறு ரீடைல் விற்பனையாளர்களையும் ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வர முடியும், இதன் படிப்படிப்படியான வளர்ச்சி அமேசான், பிளிப்கார்ட் ஆதிக்கத்தைக் குறைக்கும், இந்திய நிறுவனங்களும், விற்பனையாளர்களும் அதிகப்படியான லாபம், வருவாய், வர்த்தகத்தைப் பெறுவார்கள்.

சிங்கிள் பையர் செயலி

சிங்கிள் பையர் செயலி

ONDC தளம் தற்போது பெங்களூரில் தற்போது பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளைச் சிங்கிள் பையர் செயலி மூலம் பெறலாம். தற்போது இத்தளத்தில் இருக்கும் விற்பனையாளர்களிடம் இருந்து மளிகை பொருட்கள் மற்றும் உணவகங்களில் ஆர்டர் செய்யலாம். தற்போது மைஸ்டோர், பேடிஎம், ஸ்பைஸ்மனி ஆகியவை பையர் ஆப்களாகள ONDC தளத்தில் உள்ளது.

ONDC தளம்

ONDC தளம்

ONDC தளம் மூலம் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் மோனோபோலியாக இகுக்கும் நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வேளையில் சிறு வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகளும், வர்த்தகமும் கிடைக்கும். இத்திட்டத்தின் முதல்கட்ட சோதனை என்சிஆர், பெங்களூர், போப்பால், ஷில்லாங் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது பீட்டா டெஸ்டிங் பெங்களூரில் நடத்தப்பட்டு உள்ளது.

20 நிறுவனங்கள்

20 நிறுவனங்கள்

சுமார் 20 நிறுவனங்கள் ONDC தளத்தில் சுமார் 255 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை ஏற்கனவே முதலீடு செய்துள்ளன.

எப்படி இயங்கும்

எப்படி இயங்கும்

உதாரணமாக நீங்கள் ஒரு வாட்ச் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த வாட்ச் ONDC தளத்தில் இருக்கும் அனைத்து விற்பனையாளர்களின் விலையைக் காட்டும், நீங்கள் விருப்பமானவரிடம் இருந்து வாங்க முடியும். இதை இதேதளத்தில் இருக்கும் டெலிவரி சேவை நிறுவனங்கள் பொருட்களை வாங்கி டெலிவரி செய்துவிடுவார்கள்.

வித்தியாசம்

வித்தியாசம்

அமேசான் தளத்தில் இந்த வாட்ச்-ஐ தேடினால் இத்தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் மட்டும் தான் பார்க்க முடியும், ஆனால் ONDC தளத்தில் மூலம் இதே வாட்ச்-ஐ உள்ளூர் கடைக்காரர்களும் விற்பனை செய்ய முடியும். இதனால் அன்லைன் ரீடைல் சந்தையில் அனைத்து தரப்பினரும் விற்பனை செய்ய முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+