பல ஆண்டுகளாக ஆலோசனை செய்யப்பட்டு மத்திய அரசு முக்கியமான IDBI வங்கி குறித்து முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசு புதன் கிழமை செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் IDBI வங்கியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவின் வாயிலாக இன்றை மும்பை பங்குச்சந்தையில் ஐடிபிஐ வங்கியின் பங்கு மதிப்பு சற்றும் எதிர்பார்க்காத வகையில் கிட்டதட்ட 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 43.50 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஐடிபிஐ வங்கி
மத்திய அரசு ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ் பெரும் பகுதி பங்குகளை நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அரசி பங்கு இருப்பை விடவும் எல்ஐசி அதிகப் பங்குகளை வைத்துள்ளது.
பங்கு இருப்பு
ஐடிபிஐ வங்கியில் தற்போது மத்திய அரசு 45.5 சதவீத பங்குகளையும், எல்ஐசி 49.2 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. அதிகப் பங்குகளை வைத்துள்ளதன் மூலம் இவ்வங்கியின் நிர்வாகம் எல்ஐசி கட்டுப்பாட்டில் உள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ
எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் இவ்வங்கி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல்
இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கியின் பங்குகளை இரு தரப்பும் அதாவது எல்ஐசி மற்றும் மத்திய அரசும் பங்குகளைத் தனியாருக்கும் அல்லது வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கோ விற்பனை செய்ய உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு விற்பனை அளவு
மேலும் யார் யார் எந்த அளவிற்கான பங்குகளை விற்பனை செய்யப்படுகிறார்கள் என்பது விற்பனை செய்யும் போது முடிவு செய்யப்படும் என இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.
புதிய நிறுவனம்
மேலும் ஐடிபிஐ வங்கியைக் கைப்பற்றும் புதிய நிறுவனம் இவ்வங்கியில் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம், புதிய நிர்வாக முறையைக் கொண்டு வருவதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக
மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் ஐடிபிஐ பங்குகளை விற்பனை செய்வது மூலம் இதன் நிர்வாக ஆதிக்கத்தை இழப்பது மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளை இருதரப்பும் செய்யத் தேவையில்லை. இதன் நிதியியல் சுமை பெரிய அளவில் குறையும், அதேவேளையில் இவ்வங்கியில் சிறு பங்குதாரர் ஆக எல்ஐசியும், மத்திய அரசு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications