டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அடிப்படை ஊதியத்திலும் உயர்வினை பெற இருக்கின்றனர்.
தி ஃபைனாசியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான பேசிக் பே எனப்படும் அடிப்படை ஊதியம் 9,000 ரூபாயாக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அதேபோல வரும் ஜூலை மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி ஆகியவற்றை அடிப்படை ஊதியத்துடன் ஒன்றிணைக்க உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை விலைவாசி ஏற்றம் மற்றும் பணவீக்கத்துக்கு ஏற்ற வகையில் ஊதியத்தில் குறிப்பிட சதவிகிதத்தை உயர்த்தி வழங்குவது ஆகும்.
அந்த வகையில் நடப்பாண்டில் 4 % முதல் 50% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. இது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைய இருக்கின்றனர்.
வரும் ஜூலை மாதமே அகவிலை படியுடன் அடிப்படை ஊதியமும் ஒன்றிணைக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான உடனே மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இவை அமலுக்கு வரும்.
தேர்தல் முடிவுகள் வெளியான உடன் மத்திய அரசு இரண்டாவது முறையாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என சொல்லப்படுகிறது. மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 4% வரை உயர்த்தப்படும் என பரவலாக பேச்சுகள் எழுந்துள்ளன. இது அவர்களின் ஊதியத்திலும் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% சதவீதம் என உயர்த்தப்பட்டால் அது 54 % ஆக இருக்கும். இது அடிப்படை ஊதியத்தில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். தற்போது மத்திய அரசால் ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 50% ஐ எட்டும் போது அது பூஜ்ஜியமாக குறைப்பதற்கான விதிமுறை உள்ளது. அவ்வாறு பூஜ்ஜியம் ஆக்கப்பட்டால் மீண்டும் அகவிலைப்படி 4%ஆக உயர்த்தப்படலாம்.
பூஜ்ஜியமாக இல்லாவிட்டால் அது 54 % என கருதப்படும். ஆனால் இது தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.அரசு ஊழியர்களை பொறுத்தவரை 4% அகவிலைப்படி உயர்வு என்பதே மிகப்பெரிய பரிசாக இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications