நாட்டில் ஊழியர்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது கொரோனாவினால் பரவி வரும் கலாச்சாரம் என்றாலும், தற்போது இதனையே பல நிறுவனங்கள் நிரந்தரமாக்க முயன்றும் வருகின்றன.
இன்னும் சில நிறுவனங்கள் வீட்டில் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவும், மற்ற நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்ற ஹைபிரிட் கலாச்சாரத்தினை ஊக்குவித்து வருகின்றன.
கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது தான் படிப்படியாக அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர்.
எதிர்பார்ப்பு
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஓமிக்ரான் அச்சம் பெருகி வரும் நிலையில், மீண்டும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை அப்படியே பணிபுரிய கூறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விரைவில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம்
உருமாற்றம் அடைந்து மிக வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் காரணமாக, ஏற்கனவே இரவு நேர கட்டுப்பாடுகளை தேவையெனில் அமல்படுத்தலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலாக இது குறித்து கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் திட்டம் என்ன?
இது குறித்து எக்னாமிக் டைம்ஸில் வெளியான செய்தியொன்றில் மத்திய அரசு, ஊழியர்கள் பணிபுரியும் மாடலில் புதிய யுக்தியை கையாளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹைபிரிட் மாடல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வாரத்தில் சில நாட்கள் மட்டும் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
செலவு & வேலை நேரம்
மேலும் இதற்காக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும்போது வேலை நேரம் மற்றும் இணையம், மின்சாரம் உள்ளிட்ட செலவினங்களுக்கான பேமெண்ட்கள் உள்ளிட்டவற்றை பற்றி யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் இது குறித்து சட்ட ரீதியிலான கட்டமைப்பு குறித்து ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
அரசு இவ்வாறு அறிவிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகளை, அனைத்து துறைகளிலும் அமல்படுத்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சர்வதேச நாடுகள் கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் , அரசு இத்தகைய கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிகின்றது.
கடுமையான கட்டுப்பாடுகள் வரலாம்
அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரியில் இருந்து கடைபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இது குறித்தான வரைமுறைகளை அரசு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அண்டை நாடுகளில் ௐமிக்ரானின் தாக்கம் அண்டை நாடுகளில் மோசமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் இதன் தாக்கம் எப்படியிருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் அரசு இத்தகைய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகின்றது.
எது எப்படியோங்க வீட்டில் இருந்து பணிபுரிவது என்பது சிலருக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பெரும்பாலான ஊழியர்கள் இதனை நல்ல விஷயமாகவே பார்க்கின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications