எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீதம் பங்குகளை விற்க இந்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான, எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை அமைச்சரவையில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இது பட்ஜெட்டில் விழும் இடைவெளியினை நிரப்புவதற்காக, இந்த பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பிசினஸ் ஸ்டேண்டர்டு அறிக்கை கூறுகின்றது.
பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை
ஏற்கனவே பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்கினை, பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. அரசின் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில், எல்ஐசியின் பங்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஒரு புறம் அரசின் நிதி நெருக்கடியினை போக்குவதற்கு இந்த திட்டம் கைகொடுக்கும் என்றாலும், மறுபுறம், இந்திய இன்சூரன்ஸ் துறையின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
எல்ஐசி தான் இன்சூரன்ஸ் துறையில் டாப்
தற்போது இந்தியாவில் எல்ஐசி எதிராக பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும், இத்துறையில் முன்னிலையில் இருப்பது எல்ஐசி நிறுவனம் தான். இப்படி ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் பங்குகளை விற்பது, இன்சூரன்ஸ் துறையில் பின்னடைவை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு படு மோசமாக வீழ்ச்சிக் கண்டுள்ளது. அதே நேரம் நிதி பற்றாக்குறையும் படு மோசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பல சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களும், இந்தியாவின் வளர்ச்சியினை மேம்படுத்த, இந்தியா இன்னும் நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றன.
அரசு நிதியினை உயர்த்த திட்டம்
ஆனால் இந்தியாவிலோ, தற்போது கொரோனா காரணமாக, அரசின் வருவாயானது மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இந்த நிலையில் எல்ஐசி பங்கு விற்பனையானது கைகொடுக்கலாம் என்றும் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக எல்ஐசியின் இந்த பங்கு விற்பனை மூலம், அரசாங்கத்தின் நிதியினை உயர்த்த இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இலக்கு
எனினும் இதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு, இது எந்தளவு பங்கினை விற்கலாம் என்பதை தீர்மானிக்கும். அதே நேரம் காப்பீட்டாளரின் மூலதன கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களை அமைச்சரவை பரீசிலிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அரசு, எல்ஐசி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 2.1 டிரில்லியன் ரூபாய் நிதியினை திரட்ட இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications