எல்ஐசி ஐபிஓ மூலம் பங்கு விற்பனை செய்வதன் மூலம் 30,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது திட்டமிட்ட மதிப்பில் சுமார் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அரசு 5% பங்கினை விற்பனை செய்வதன் மூலம் 55,000 - 65,000 ரூபாய் வரையில் நிதி திரட்டலாம் என அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கலாம் என தெரிகின்றது.
நிதி இலக்கு
அரசு நிதி திரட்டும் இலக்கை பாதியாக குறைத்தாலும், இது இன்று வரையில் இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனம் 6 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய மதிப்பீட்டினை விட கணிசமாக குறைந்துள்ளது.
அனுமதி எப்போது?
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வரை வெளியாகவில்லை. எல்ஐசி ஐபிஓ வெளியிட அரசு 12ம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. அதற்குள் அரசு பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக செபியிடம் மத்திய அரசு பங்கு வெளியீடு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
முதலீடுகள் குறையலாம்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நடந்து வருவதால், இந்த நேரத்தில் எல்ஐசி ஐபிஓ நடத்தினால், அன்னிய முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பங்கு விற்பனையையும் ஒத்தி வைக்கக் கூடாது. இந்த நிலையில் தான் மத்திய அரசு பங்கு வெளியீட்டு அளவை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பட்ஜெட்டில் அரசு வைத்த நிதி திரட்டல் இலக்கினை குறைய வழிவகுக்கலாம்.
எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம்
66 வயதான நிறுவனம் 280 மில்லியனுக்கும் அதிகமான பாலிசிகளுடன் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2020ம் ஆண்டில் இன்சூரன்ஸ் பிரீமிய கலெக்ஷன் அடிப்படையில் 5வது மிகப்பெரிய சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனமாகவும் உள்ளது. எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளராகவும் உள்ளது.
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications