டெல்லி: மத்திய அரசு பணியாளர் வருங்கால வைப்பு நிதியை (EPF -இபிஎஃப்) கணக்கீடு செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பை 15,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரக்கூடிய பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊதிய வரம்பை உயர்த்தும் அறிவிப்பு வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.
தற்போதைக்கு இபிஎஃப்-இன் கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய வரம்பு 15,000 ரூபாய என கணக்கில் கொண்டு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. இதனை 21,000 ரூபாயாக அரசு மாற்ற இருக்கிறது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு வரை இபிஎஃப் கணக்கிடுவதற்கான ஊதிய வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. பிறகு இது 15,000 ரூபாயாக மாற்றப்பட்டது.

முன்னதாக தொழிலாளர் துறை அமைச்சகம் இபிஎஃப் திட்டத்தின் கீழ் இருக்கும் ஊழியர்களின் ஊதிய வரம்பை உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்தது. இதன் அடிப்படையில் தான் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் ஊதிய வரம்பு 21,000 ரூபாய் என உயர்த்தப்பட்டால் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் திட்டங்களின் கீழ் இருக்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அதிகபட்ச நிதியுடன் ஓய்வு பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையும் உயரும். தற்போது ஊழியர்களின் சம்பளத்தில் இபிஎஃப் பங்களிப்புக்கு அதிகபட்ச ஊதிய வரம்பாக 15,000 ரூபாய் கொண்டு அதில் 12 சதவீத தொகையானது இபிஎஃப் பங்களிப்பாக வழங்கப்படுகிறது.
இதில் குறிப்பிட்ட தொகை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், அவர்களுக்கு வேலை வழங்கிய நிறுவனங்களும் வழங்குகின்றன. ஊதிய உச்சவரம்பு 21,000 ரூபாய் உயர்த்தப்படும் என போது இபிஎஃப் பென்ஷனும் உயரும். உதாரணமாக தற்போது 15 ஆயிரம் ரூபாய் என்ற ஊதிய உச்ச வரம்பில் பென்ஷன் என்பது மாதத்திற்கு 7,500 என்ற அளவில் வருகிறது, இதுவே ஊதிய உச்சவரம்பு 21,000 என உயர்த்தப்படும் போது மாதாந்திர பென்ஷன் தொகையின் அளவு 10,050 ரூபாய் என அதிகமாகும். எனவே பென்ஷன் மதிப்பு மாதத்திற்கு 2550 ரூபாய் உயர்கிறது.
இதனிடையே தொழிலாளர் யூனியன்கள் இபிஎஃப் ஊதிய உச்சவரம்பை 25 ஆயிரம் ரூபாய் என உயர்த்த வேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு பணவீக்க வீதம் 5.1 சதவீதமாக இருந்தது, அதுவே 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6.2% சதவீதம் என அதிகரித்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டு இபிஎஃப் பங்களிப்புக்கான ஊதிய உச்சவரம்பையும் உயர்த்த வேண்டும் என தொழிலாளர் யூனியன்கள் கோரிக்கை விடுக்கின்றன.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications