ஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..!

2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு படு பிசியாக இருக்கும் நிலையில், நிதித்துறையில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் தனியார் மற்றும் பொதுத்துகை வங்கிகள் மத்தியில் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் நிதியியல் செயல்பாடுகளையும், வங்கி விரிவாக்கம் பற்றிப் பெரிய அளவில் விவாதம் செய்யப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தின் முடிவில் சில முக்கியமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய அரசு தான் பட்டியலிட்டுள்ள இடங்களில் புதிய வங்கி கிளைகளைத் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

15,000 புதிய வங்கி கிளைகள்

15,000 புதிய வங்கி கிளைகள்

மத்திய அரசின் அறிவுரையின் படி 2020- 21 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வங்கி சேவைகள் அனைவருக்கும் அனைத்து பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் விதத்தில் மத்திய அரசு தான் பட்டியலிட்டுள்ள இடங்களில் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 14000- 15000 வங்கி கிளை திறக்க நாட்டின் முக்கியமான 4 வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

4 வங்கிகள்

4 வங்கிகள்

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆ பரோடா, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய 4 வங்கிகளை முக்கிய வங்கிகளாக அறிவித்து இந்த 15,000 புதிய வங்கி கிளைகளைத் திறக்க மத்திய அரசு செயல் திட்டம் தீட்டியுள்ளது. நாட்டின் வங்கி சேவைகள் அதிகம் இல்லாத நாட்டு மக்களை வங்கி சேவை மூலம் இணைக்கும் வகையில் இப்புதிய வங்கிகள் கிளை அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.ட

15 கிலோமீட்டர்

15 கிலோமீட்டர்


வங்கி சேவை இல்லாத கிராமங்களுக்கு 15 கிலோமீட்டர்-க்கு உட்பட்ட இடத்தில் வங்கி கிளைகள் அமைக்க வேண்டும் என நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுரை கொடுத்துள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி

மத்திய அரசின் திட்டத்தின் படி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகள் தலா 1500 புதிய வங்கிகளை, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் 600 முதல் 700 வங்கிகளைக் கிளைகளைத் திறக்க வேண்டும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய வங்கி கிளைகள் வங்கிகள் இல்லாத கிராமம் மற்றும் பஞ்சாயத் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.

 

மார்ச் 2019

மார்ச் 2019

இந்திய வங்கித்துறையின் மார்ச் 2019 நிலவரத்தின் படி நாட்டில் 1,20,000 வங்கி கிளைகள், 2 லட்சம் வங்கி ஏடிஎம்கள் ஆகியவை உள்ளது. இதில் 35,649 வங்கிக் கிளைகள் மட்டுமே கிராமப் பகுதிகளில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+