பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களை ரிசர்வ் வங்கி முக்கிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட மொத்தம் நான்கு பேர்களை ரிசர்வ் வங்கி தனது நிர்வாக குழுவின் உறுப்பினர்களில் இணைத்துள்ளது.
ஜூன் 14ம் தேதி முதல் அதாவது நேற்று முதல் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மூவர் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக இருந்து ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக்காக தங்களது அறிவுரைகளை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திராதொழிலதிபர் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பிரபலம் என்பது தெரிந்ததே. சமூகத்தில் ஏதாவது சாதனை செய்பவர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் குறித்த வீடியோக்கள் வெளி வந்தால் உடனே அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு தன்னால் முடிந்த பரிசுகளையும் அளித்து அசத்துவார் என்பதும் அவரிடம் பரிசு பெற்றவர்கள் ஏராளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிர்வாக குழு உறுப்பினர்
அந்த வகையில் தொழிலதிபர் மட்டுமின்றி சமூக அக்கறையோடு இருக்கும் ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு ரிசர்வ் வங்கி தனது நிர்வாக குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இணைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
4 உறுப்பினர்கள்
ஆனந்த் மஹிந்திரா மட்டுமின்றி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் வேணு சீனிவாசன் மற்றும் Zydus Life sciences நிறுவனத்தின் பங்கஜ் பட்டேல் ஆகியோர்களும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பேராசிரியர் ரவீந்திர எச். தோலக்கியா
மேலும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் அகமதாபாத் பணவியல் கொள்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ரவீந்திர எச். தோலக்கியா அவர்களும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் ஏற்கனவே 11 பேர் இருக்கும் நிலையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா உள்பட மேலும் 4 பேரை இணைத்து உள்ளதை அடுத்து மத்திய நிர்வாகக் குழுவில் தற்போது 15 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 ஆண்டுகள்
ஜூன் 14ம் தேதி முதல் 4 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை எது முன்னதாக இருக்குமோ அதுவரை மேற்கண்ட நான்கு பேர்களும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவின் உறுப்பினராக இருப்பார்கள் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக்கு தேவையான அறிவுரைகள், வட்டி விகிதம் கூட்டுவது மற்றும் குறைப்பது, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை இந்த நிர்வாக குழுவில் உள்ள உறுப்பினர்கள் எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications